Published:Updated:

`தீபாவளி பரிசு காத்திருக்கிறது என்பார்கள்... நம்பாதே..!’ - தேனியைக் கலக்கும் காவல்துறையின் மீம்ஸ்

தற்போது தேனி மாவட்டக் காவல்துறையின் மீம்ஸ்கள்தான் அதிக அளவில் பகிரப்பட்டுவருகிறன.

மீம்ஸ்
மீம்ஸ்

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி எம்.பி’யுமான ரவீந்திரநாத்குமாரின் பெயர் பொறித்த குச்சனூர் கோயில் கல்வெட்டை வைத்து உற்பத்தியான மீம்ஸ்களுக்குப் பிறகு தற்போது தேனி மாவட்டக் காவல்துறையின் மீம்ஸ்கள்தான் அதிக அளவில் பகிரப்பட்டுவருகின்றன.

மீம்ஸ்
மீம்ஸ்

பொதுவாகவே மக்களிடம் மீம்ஸ்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. மீம்ஸ்கள் பொதுவாக கிண்டல், கேலி, நகைச்சுவைக்கு மட்டும் பயன்படுத்துவது கிடையாது. சமூக அக்கறை கொண்ட மீம்ஸ்களை தினமும் பார்க்கிறோம். அந்த வகையில் மீம்ஸ்களை வைத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது தேனி மாவட்டக் காவல்துறை.

தங்களது அதிகாரபூர்வ சமூக வலைதளப்பக்கங்களில் மீம்ஸ்களைப் பதிவேற்றிவிடுகிறது. அதை பதிவிறக்கம் செய்து பலரும் தேனி மாவட்ட வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்துவருகிறார்கள்.

மீம்ஸ் டு மேதகு தமிழிசை!
அப்பாவுக்குக் கிடைக்காத கவர்னர் பதவி மகளுக்குக் கிடைத்தது
மீம்ஸ்
மீம்ஸ்

தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர்களின் கைது, குண்டாஸில் கைதானவர்கள் எனத் துவங்கி, ஹெல்மெட்டை எப்படி அணிவது, கம்ப்யூட்டர்களில் பரவும் வைரஸ்கள், தீபாவளி மோசடி அழைப்புகள் வரை விழிப்புணர்வு ஏற்படுத்தும் மீம்ஸ்களை உருவாக்கி பகிர்ந்துவருகிறது காவல்துறை.

மீம்ஸ்
மீம்ஸ்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், ``பல மாவட்டங்களில் இதுபோன்று காவல்துறை தரப்பில் மீம்ஸ்கள் உருவாக்கி, மக்களிடையே பகிரப்படுகிறது. நகைச்சுவை மீம்ஸ்களுக்கு மத்தியில் இதுபோன்ற விழிப்புணர்வு மீம்ஸ்களை மக்கள் அதிகம் பகிர்ந்துவருகிறார்கள்.

மீம்ஸ்
மீம்ஸ்

தீபாவளிப் பரிசு கொடுப்பதாக கூறி வங்கிக்கணக்கு விவரங்களைக் கேட்கும் மோசடி அழைப்புகள் குறித்த மீம்ஸ், தேனி முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது” என்றார்.