Published:Updated:

`ஓய்வும் இல்லை.. விடுப்பும் இல்லை..!’ -மாநில எல்லையில் தவிக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் #Corona

தமிழக கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் பணியில் உள்ள வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர்பணி காரணமாக, மன உளைச்சலுக்கு ஆளாகி, உடல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள மாவட்டங்களில் ஒன்று தேனி. கேரளாவிலிருந்து தமிழகத்திற்கும் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கும் இ-பாஸ் பெற்று மக்கள் பயணித்துவருகிறார்கள். இந்த நிலையில், குமுளி மற்றும் கம்பம்மெட்டு ஆகிய தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் பணியில் உள்ள வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ஓய்வு இல்லாமல் தொடர் பணி வழங்கப்பட்டுவருவதாகவும், இதனால், அவர்கள் மன உலைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் குற்றச்சாட்டு வைக்கின்றனர் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர்.

Theni Collector Office
Theni Collector Office
`தாராவி டு தேனி; 30 பயணிகள்; போலி இ-பாஸ்!’ - அதிரவைத்த ஆம்னி பேருந்து மோசடி

இது தொடர்பாக நம்மிடையே பேசிய தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க தேனி மாவட்டத் தலைவர் ராமலிங்கம், ``குமுளி சோதனைச்சாவடியில் பணியில் உள்ள காவல்துறையினர், சுகாதாரத்துறையினருக்குத் தேவையான ஓய்வு மற்றும் வேறு நபர்களை பணியமர்த்துவது போன்ற நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது. அதைதான் தமிழக அரசும் அறிவுறுத்தியது.

ஆனால், தேனி மாவட்ட வருவாய்த்துறைக்கு மட்டும் ஓய்வோ, பணி இடைவேளையோ கிடையாது. கம்பம்மெட்டில் இருக்கும் இரண்டு வருவாய்த்துறை அதிகாரிகள் கடந்த 2 மாதங்களாக ஓய்வோ, விடுப்போ இல்லாமல் தொடர் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். அதேபோல, குமுளி சோதனைச்சாவடியில் உள்ள மூன்று வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஒரு பெண் அலுவலர் பணி அழுத்தம் காரணமாக தவிக்கிறார்கள். 7 நாள்களுக்கு ஒருமுறை வேறு அதிகாரிகளை நியமித்து ரேண்டமாக பணி செய்ய நாங்கள் அறிவுறுத்தினோம். அதை கலெக்டர் கண்டுகொள்ளவே இல்லை.

Theni Collector
Theni Collector

வருவாய்த்துறை கோரிக்கை என அவரிடம் சென்றால், எங்களை சந்திப்பதே இல்லை. அதையும் மீறி மனு கொடுத்தால், மனு கொடுப்பவருக்கு பல இன்னல்கள் வருகிறது. இதற்குப் பயந்துதான் சோதனைச்சாவடியில் உள்ள அதிகாரிகள் அமைதியாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் குடும்பம் உள்ளது. காவல்துறை, சுகாதாரத்துறை எப்படி அதிகாரிகளை, அலுவலர்களைக் கையாளுகிறதோ, அதைப் பார்த்து மாவட்ட நிர்வாகம் இனி நடந்துகொள்ளும் என நம்புவோம்” என்றார் காட்டமாக.

`டயட் கன்ட்ரோல், அசைவத்துக்கு குட்பை..!' - மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு என்ன செய்கிறார் ஓ.பி.எஸ்?

இது தொடர்பாக விளக்கம் பெற கலெக்டரை தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால் அவர் போன் எடுக்கவில்லை. உடனடியாக, மாவட்ட வருவாய் அலுவலரை தொடர்புகொண்டு பேசினோம். ``இது தொடர்பாக கவனித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு