Published:Updated:

`மருத்துவமனையில் இருந்த ஐவரும் வீடு திரும்பினர்!’ - ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறிய தேனி

குணமடைந்தவர்கள் காரில் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்
குணமடைந்தவர்கள் காரில் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்

கொரோனா பாசிட்டிவ் நபர்கள் இல்லாத மாவட்டமாக தேனி உருவாகியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஐந்து நபர்களும், பூரண குணமடைந்து இன்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

தேனி மாவட்டத்தில், கடந்த மார்ச் 31ம் தேதி, முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அடுத்தடுத்து கொரோனா பாசிட்டிவ் நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, மொத்தம் 43 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு கானாவிலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சையில் இருந்த 53 வயது பெண் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

`சோதனைக்காக வாகனத்தை நிறுத்திய போலீஸார்; பேரிகார்டில் முட்டிக்கொண்ட இளைஞர்!’- தேனி அதிர்ச்சி
Theni GH
Theni GH

தொடர்ந்து, ஏப்ரல் 16ம் தேதி 18 நபர்கள் குணமடைந்து அவரவரர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பின்னர், ஏப்ரல் 22-ம் தேதி இரண்டு நபர்களும், ஏப்ரல் 24-ம் தேதி 13 நபர்களும், ஏப்ரல் 26-ம் தேதி இரண்டு நபர்களும், ஏப்ரல் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தலா ஒருவரும் என மொத்தம் 37 நபர்கள் அடுத்தடுத்து குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்நிலையில், இன்று மாலை, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஐந்து நபர்களும், வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் என அனைவரும் மலர் தூவி, கை தட்டி, அனுப்பிவைத்தனர். இந்த ஐந்து நபர்களில், 2 ஆண்கள், 2 பெண்கள், 10 வயது சிறுமி ஒருவரும் அடங்குவர். இவர்கள் போடி மற்றும் அல்லிநகரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அனைவரும், தங்களை 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குணமடைந்தவர்கள் காரில் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்
குணமடைந்தவர்கள் காரில் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 17ம் தேதியில் இருந்து 30ம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு தேனியில் கொரோனா பாசிட்டிவ் கேஸ்கள் இல்லை. இந்நிலையில், இன்று சிகிச்சையில் இருந்த ஐந்து நபர்களும் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், தேனி மாவட்டம் ரெட் மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

`இனியும் போராட முடியாது; வாழையை அழிக்கும் தேனி விவசாயிகள்!’ - மாற்றுப் பயிருக்கு மாறுவதில் தீவிரம்
அடுத்த கட்டுரைக்கு