Published:Updated:

`கடனை அடைத்து பாரத்தை இறக்கிவிட்டார்கள்'- தேனி விவசாயிகளை நெகிழவைத்த விஜய் மக்கள் இயக்கம்!

இரண்டு விவசாயிகளின் விவசாயக் கடனை அடைத்திருக்கிறார்கள், தேனி தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர்.

தளபதி விஜய் மக்கள் இயக்கம்
தளபதி விஜய் மக்கள் இயக்கம்

'பிகில்' பட வெளியீட்டின்போது, தேனி மாவட்டம் முழுவதும் பேனர் வைப்பதைத் தவிர்த்து, அந்தப் பணத்தை, இரண்டு விவசாயிகளின் விவசாயக் கடனை அடைத்திருக்கிறார்கள், தேனி தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர்.

தளபதி விஜய் மக்கள் இயக்கம்
தளபதி விஜய் மக்கள் இயக்கம்

இது தொடர்பாகத் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தேனி மாவட்டத் தலைவர் பாண்டி பேசும்போது, ”பிகில் படம் ரிலீஸ் நேரத்தில், பேனர் வைக்கக்கூடாது என தளபதி கூறினார். அதன்படி நாங்கள் பேனர் வைக்கவில்லை. மாறாக, அந்தப் பணத்தை நல்ல காரியத்திற்குப் பயன்படுத்த முடிவுசெய்தோம். தேனி விவசாயப் பகுதி. நானும், என்னுடன் இருக்கும் அனைவரும் விவசாயப் பின்னணி உள்ளவர்கள்தான்.

Vikatan

எனவே, விவசாயக் கடனை அடைக்க முடியாமல் சிரமப்படும் விவசாயிகளுக்கு, அந்தப் பணத்தைக் கொடுக்கலாம் என முடிவு செய்தோம். அதன்படி, ஜெயமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம் மற்றும் பள்ளபட்டியைச் சேர்ந்த விவசாயி முனியாண்டி ஆகியோர், கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடனை அடைத்தோம். விவசாயி ஆறுமுகம், வாழைப் பயிர் செய்ய 46 ஆயிரம் ரூபாய் வங்கியில் கடன் வாங்கியிருந்தார். அதேபோல, விவசாயி முனியாண்டி, 49 ஆயிரத்து 450 ரூபாய் கடன் பாக்கி வைத்திருந்தார். இருவரது கடனையும் நேற்று அடைத்தோம்.

தளபதி விஜய் மக்கள் இயக்கம்
தளபதி விஜய் மக்கள் இயக்கம்

அதற்கான உரிய ஆவணங்களை இன்று அவர்களிடம் கொடுத்தோம். மன நிறைவாக இருக்கிறது” என்றார் மகிழ்ச்சியோடு. விவசாயிகள், ஆறுமுகம் மற்றும் முனியாண்டி கூறும்போது, “வங்கியில் கடன் வாங்கி மிகவும் சிரமப்பட்டோம். அடுத்து விவசாயம் செய்யக்கூட கையில் காசு இல்லை. விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்த உதவியை நாங்கள் என்றுமே மறக்க மாட்டோம். எங்கள் பாரத்தைக் கீழே இறக்கிவைத்திருக்கிறார்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது” என்று நெகிழ்ந்தனர்.

எனக்கு ஏகப்பட்ட கடன் இருக்கு! - கமல் | Vijay | Mersal