Published:Updated:

தேனி: `பலமணி நேரக் காத்திருப்பு; வராத ஆம்புலன்ஸ்’ - கொரோனா பாதித்தவரை விரட்டிய மக்கள்!

சாலை ஓரத்தில் அமர வைக்கப்பட்ட கொரோனா பாதித்த நபர்
சாலை ஓரத்தில் அமர வைக்கப்பட்ட கொரோனா பாதித்த நபர்

கொரோனா பாதித்த நபரை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வராததால், அவர் சாலையின் ஓரத்தில் அமரவைக்கப்பட, ஊர் மக்கள் அவரை விரட்டினர்.

தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர், கடந்த சில நாள்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவு காரணமாக, மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கே, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்னர், வந்த பரிசோதனை முடிவில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

சாலையில் கூடிய பொதுமக்கள்
சாலையில் கூடிய பொதுமக்கள்
தேனி: `கறுப்பு கவுணி புட்டு; சிவப்பு அவல் உப்புமா!’ - அசத்தும் சித்த மருத்துவ சிகிச்சை மையம்

இந்நிலையில், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். சிறிய வீட்டில் ஐந்து நபர்களோடு வசிக்கும் அவர், இரண்டு நாள்களாக வீட்டினுள் முடங்கியுள்ளார். அவரது வீட்டின் அருகே வசிக்கும் நபர்கள், அவரை மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், அவரது வீட்டைச் சேர்ந்த நபர்களிடம் சண்டையிட்டுள்ளனர். இந்நிலையில், சுகாதாரத்துறையினரை தொடர்புகொண்டு, மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார் அந்த நபர். தொடர்ந்து, `கொடுவிலார்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்துவிடுங்கள். ஆம்புலன்ஸ் வரும்’ எனக் கூறியுள்ளனர் சுகாதாரத்துறையினர்.

corona
corona
தேனி: மனைவி மரணத்தில் மர்மம்! - கைக்குழந்தையோடு கலெக்டர் அலுவலகத்தில் கலங்கிய நபர்

அவர்கள் கூறியது போல, கொடுவிலார்பட்டி பேருந்து நிறுத்தம் வந்த அந்த நபரை, அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஏதும் வரவில்லை.

பல மணி நேரம் அங்கேயே காத்திருந்த கொரோனா நபரைக் கண்ட ஊர் மக்கள், அங்கிருந்து விரட்டியுள்ளனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த பஞ்சாயத்து அலுவலர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர், ஊர் மக்களை சமாதானம் செய்தனர்.

Corona
Corona
Unsplash
தேனி: பழக்கத்தைக் கண்டித்த உறவினர்கள்! - தற்கொலை முடிவை நாடிய இருவர்

இருந்தபோதும், சாலையின் ஓரத்தில் அமர்ந்திருந்த நபருக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை மீண்டும் விரட்டவே, அந்த நபரை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அமர வைத்தனர். அப்போதும் ஆம்புலன்ஸ் வராததால், வேறு வழி இன்றி ஆட்டோ ஒன்றினை ஏற்பாடு செய்து அந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு