Published:Updated:

மகாராஷ்டிரா டு தேனி; தனிமைப்படுத்தல்! - போடி முகாமில் விபரீத முடிவெடுத்த இளைஞர்

சசிகுமார்
சசிகுமார்

போடியில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில், இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், தேனியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது 20). மகாராஷ்டிரா மாநிலத்தில் வேலை பார்த்துவந்த இவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர், சிறப்பு ரயில் மூலம் தனது சொந்த ஊரான தேனிக்கு வந்துள்ளார். தேனி மாவட்ட எல்லையான காட்டுரோடு சோதனைச் சாவடியில், சசிகுமாரை சோதனை செய்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்தனர். தொடர்ந்து, வெளி மாநிலத்தில் இருந்து வந்திருப்பதால், போடி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் முகாமிற்கு சசிகுமார் அனுப்பிவைக்கப்பட்டார்.

பிரசவத்திற்கு வந்த பெண்ணின் கருப்பையில் பஞ்சு... அரசு மருத்துவர்களின் அலட்சியம்?! -தேனி அதிர்ச்சி
தனிமைப்படுத்தல் முகாம்
தனிமைப்படுத்தல் முகாம்

இந்நிலையில், இன்று மாலை, அவரது அறையில், தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சுகாதாரத்துறை, வருவாய்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போடி போலீசார் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இளைஞரின் மரணத்தால், டி.சுப்புலாபுரம் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இது தொடர்பாக போலீஸார் கூறும்போது, ``என்ன காரணம் என்பது குறித்து விசாரணை செய்துவருகிறோம். அவருடன், இரண்டு நபர்கள் அந்த அறையில் தங்கியிருந்தனர். அவர்கள் இல்லாத நேரம் பார்த்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். விசாரணை முடிவில் என்ன காரணம் என்பது தெரியவரும்” என்றனர்.

தனிமைப்படுத்தல் முகாம்
தனிமைப்படுத்தல் முகாம்
குஜராத் டு தேனி; கோயம்பேடு டிராவல் ஹிஸ்ட்ரி! - கண்காணிப்பில் கோட்டைவிடுகிறதா தேனி?

இச்சம்பவத்தால், முகாமில் உள்ள 75 நபர்களும் அச்சமடைந்தனர். தங்களுக்கு கொரோனா தொற்று இல்லாத நிலையில், உடனே வீடுகளுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டனர். அவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.

கடந்த மார்ச் 27ம் தேதி, போடியில், வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர், சாலை ஓரம் படுத்து உறங்கிக்கொண்டிருந்த மூதாட்டியின் கழுத்தை கடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அடுத்த கட்டுரைக்கு