Published:Updated:

`என்ன கட்டுப்பாடு போட்டாலும் ஏற்கிறோம்!’- சேவல் சண்டை அனுமதியை எதிர்நோக்கும் தேனி இளைஞர்கள்

கருஞ்செவளை, சாம்பல்செவளை, மாரி, மயில் உட்பட 20 -க்கும் மேற்பட்ட சண்டைச் சேவல் இனங்கள் உள்ளன.

சேவல்
சேவல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கவுள்ள நிலையில், தமிழர் கலாசாரங்களில் ஒன்றான சேவல் சண்டைக்கும் அனுமதி வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள், தேனி இளைஞர்கள்.

சேவல்
சேவல்
ரசாயனம் போடாத ஆர்கானிக் செங்கரும்பு... சாகுபடியில் அசத்தும் தேனி விவசாயி!

தேனி மாவட்டத்தில் கம்பம், போடி, சின்னமனூர், அல்லிநகரம், பாலார்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் சண்டைச் சேவல்கள் வளர்க்கப்படுகின்றன. இவற்றைப் பெரும்பாலும், படித்த இளைஞர்களே வளர்த்துப் பராமரித்து வருகிறார்கள். பல இடங்களில், அனுபவம் மிக்க நடுவர்களை வைத்து முறையாக சேவல் சண்டை நடைபெற்றாலும், சில இடங்களில், சேவல் காலில் கத்தியைக் கட்டி சண்டைக்கு விடுவதும் உண்டு.

சேவல்
சேவல்

இதனால் களத்திலேயே சேவல்கள் பலியாவதும், அதைப் பார்த்துக்கொண்டிருப்பவர்கள் காயமடைவதும் தொடர்கதையாகிவந்தது. இதன் விளைவாக, ஒட்டுமொத்த சேவல் சண்டைக்கும் தேனி மாவட்ட நிர்வாகம் கடந்த 4 ஆண்டுகளாக அனுமதி கொடுக்கவில்லை.

குப்பைத்தொட்டியாகும் தேனி வால்கரடு!

சண்டைச் சேவல் வளர்க்கும் தேனி ஆசிக் என்பவர், ”கருஞ்செவளை, சாம்பல்செவளை, மாரி, மயில் உட்பட 20 -க்கும் மேற்பட்ட சண்டைச் சேவல் இனங்கள் உள்ளன. சேவலை வீட்டில் ஒரு ஆளாக நினைத்து வளர்ப்போம். பாதாம், முட்டை, பிஸ்தா போன்றவற்றைக் கொடுத்து ஆரோக்கியமாகவும், வலுவுள்ள சேவலாகவும் வளர்த்தெடுப்போம். மாதம் 2ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை செலவுசெய்வோம். இவ்வளவும் செய்து, சேவல் சண்டை கிடையாது எனச் சொல்வது தமிழர் கலாசாரத்தை அழிக்கும் செயல். இதனால் நாட்டுச் சேவல் இனமே அழிந்துபோகும். எவ்வளவு கட்டுப்பாடுகள் போட்டாலும் சரி, நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், சேவல் சண்டையை நடத்த அனுமதி கொடுங்கள்” என்றார்.

சேவல்
சேவல்

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, “ சில மாவட்டங்களில், மாவட்ட நிர்வாகத்தின் நேரடி கண்காணிப்பில் சேவல் சண்டைகள் நடக்கின்றன. அதுபோன்று தேனியில் நடக்க வேண்டும் என்றால், தமிழக அரசு அனுமதி கொடுக்க வேண்டும்” என்றனர்.