Published:Updated:

`மணப்பாறையில் மிதமான மழைக்கு வாய்ப்பு’ - வானிலை ஆய்வு மையம் தகவல்!

அடுத்த இரண்டு தினங்களுக்கு மணப்பாறையில் மிதமான மழை பெய்யக் கூடும். இது தொடர்பாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

வானிலை முன்னறிவிப்பு
வானிலை முன்னறிவிப்பு

வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. கடந்த சில நாள்களாக மழை பெய்யவில்லை. இந்நிலையில் மீண்டும் மழை பெய்யத்தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

பாலசந்திரன்
பாலசந்திரன்

இது நாளை குமரிக் கடல் பகுதியில் நகர்ந்து வலுப்பெறும். மேலும், அக்டோபர் 30, 31 ஆகிய தேதிகளில் தென் கிழக்கு அரபிக் கடல், லட்சத் தீவுப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் வல்லம், குமரி மாவட்டம் கொட்டாரத்தில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் ஓரிரு பகுதி மற்றும் வடதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மழை
சென்னை மழை

அதேபோல குமரி, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட இடங்கில் கனமழை பெய்யும். தெற்கு கேரள, தென் தமிழக கடல் பகுதி, லட்சத் தீவு கடற்பகுதிகளில் அக்டோபர் 29, 30, 31 ஆகிய தேதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். அடுத்த இரண்டு தினங்களுக்கு மணப்பாறையில் மிதமான மழை பெய்யக் கூடும். இது தொடர்பாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது'' என்றார்.