Published:Updated:

பெகாசஸ் ஸ்பைவேர்: ``நாளை அனைவர் மீதும் ஏவப்படும்''- எச்சரிக்கும் திருமுருகன் காந்தி!

திருமுருகன் காந்தி
திருமுருகன் காந்தி

பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் செல்போன் உளவு பார்க்கப்படும் விவகாரம் தொடர்பாக திருமுருகன் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.

பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் அரசியல் கட்சியினர், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள் செயற்பாட்டாளர்களின் செல்போன் உளவு பார்க்கப்பட்டதாக ஆங்கில நாளிதழ்களில் வெளியாகியுள்ள தகவல் பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது.

பெகாசஸ்' ஸ்பைவேர்'
பெகாசஸ்' ஸ்பைவேர்'
'பெகாசஸ்' ஸ்பைவேர்:  நாடாளுமன்ற கூட்டத்தொடரில் புயலைக் கிளப்பும் உளவு பார்க்கப்பட்ட விவகாரம்?!

இந்தியாவில் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலால், எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் மத்திய பா.ஜ.க அரசை கடுமையாக சாடி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்நிலையில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “பா.ஜ.க-வை அம்பலப்படுத்துகின்றனர் என்பதற்காகவே செல்போனை ஒட்டுக் கேட்கின்றனர். பா.ஜ.க-வை நோக்கி கேள்வி எழுப்புபவர்களை குறி வைத்துள்ளனர். பா.ஜ.க காலத்தில் இதுபோன்ற போக்கு அதிகமாக உள்ளது.

திருமுருகன் காந்தி
திருமுருகன் காந்தி

எமர்ஜென்ஸியை எதிர்த்த பா.ஜ.க, இப்போது அறிவிக்காமலேயே அதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அந்த பெகாசஸ் ஸ்பைவேர் மூலம், நாம் எங்கு செல்கிறோம் என்பதைக் கண்காணிக்க முடியும். மெக்ஸிகோவில் இதேபோல உளவு பார்க்கப்பட்ட ஒரு நேர்மையான ஊடகவியலாளர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் நமது அனுமதி இல்லாமலேயே, நம் செல்போனை பயன்படுத்தி வீடியோ, ஆடியோ எடுக்க முடியும். அது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்த அச்சுறுத்தலை பார்த்து நாங்கள் அஞ்சவில்லை. அது நாளை அனைவர் மீதும் ஏவப்படும் என்பதற்காகத்தான் பேசுகிறோம். 2024- நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற வாய்ப்பு கிடையாது.

உளவு
உளவு

அதற்கான வேலைகளை தான் இப்போது தொடங்கியுள்ளனர். அண்ணாமலை பேசும்போது கூட 2024 தேர்தலுக்கு இப்போது உழைக்க வேண்டும் என்கிறார். நல்லது செய்தால் மக்களே ஓட்டு போடப் போகின்றனர்.

தொடர்ந்து தேர்தல் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் நோக்கமாக இருக்கிறதே தவிர, மக்களுக்கு நல்லது செய்வது அவர்கள் நோக்கமாக இல்லை. இஸ்ரேலில் உருவாக்கப்படும் இந்த பெகாசஸ் ஸ்பைவேர் தனியார்களுக்கு விற்கப்படுவதில்லை. பிரதமர் மோடி பத்திரிகையாளர்களைச் சந்திப்பதில்லை.

திருமுருகன் காந்தி
திருமுருகன் காந்தி

அதேநேரத்தில் ஊடகங்களுக்கு பல்வேறு வகையில் நெருக்கடிகளை கொடுத்து வருகின்றனர். இதற்காக அரசு வெட்கப்பட வேண்டும். மக்களுக்காக உழைப்பவர்களை உளவு பார்த்து அச்சுறுத்த நினைக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களை ஒன்றிணைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு