Election bannerElection banner
Published:Updated:

`ஊரடங்கில் ஊருக்குள் நுழைந்த புள்ளிமான்கள்!' - தண்ணீர் கொடுத்து உபசரித்த திருநின்றவூர் மக்கள்

பிடிபட்ட புள்ளி மான்
பிடிபட்ட புள்ளி மான்

சென்னையில் ஊருக்குள் புகுந்த புள்ளிமானை ஒரு மணிநேரமாக விரட்டிப் பிடித்த பொதுமக்கள், போலீஸாரின் உதவியோடு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

ஊரடங்கு உத்தரவால் மக்கள் நடமாட்டம் இல்லை. அதனால் ஊருக்குள் வனவிலங்குகள் சுதந்திரமாகச் சுற்றித்திரிவது வாடிக்கையாகிவிட்டன. இந்தநிலையில் சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூரில் இன்று காலை தெருவழியாகப் புள்ளிமான் நடந்து செல்வதைப் பொதுமக்கள் பார்த்தனர். உடனடியாக அதைப் பிடிக்க திருநின்றவூர், அந்தோணி நகரைச் சேர்ந்த இளைஞர்கள் முயற்சி செய்தனர்.

`ஊருக்குள் வந்து ஆட்டை அடித்துச் செல்லும் சிறுத்தை!'- சிசிடிவி காட்சிகளால் பதறும் அம்பாசமுத்திரம்
புள்ளி மான்
புள்ளி மான்

ஆனால், அவர்களிடமிருந்து தப்பிய புள்ளிமான் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. இளைஞர்களும் சிறுவர்களும் புள்ளிமானை விரட்டிச் சென்றனர். அந்தோணி நகர் 2-வது குறுக்குத் தெருவில் உள்ள ஒரு வீட்டுக்குள் புள்ளிமான் புகுந்தது. இதையடுத்து இளைஞர்கள் அந்த வீட்டின் கதவைப் பூட்டினர். பின்னர் சுற்றி வளைத்து புள்ளிமானைப் பிடித்தனர். அதையடுத்து மானின் கால்களைக் கட்டினர். அதனால் புள்ளிமானால் ஓட முடியவில்லை.

இதற்கிடையில் திருநின்றவூர் இன்ஸ்பெக்டர் குணசேகரனுக்கு தகவல் தெரிந்ததும் போலீஸார் அங்கு சென்றனர். உடனடியாகப் புள்ளிமானுக்கு தண்ணீர் கொடுத்தனர். புள்ளிமான் பிடிபட்ட தகவல் தெரிந்ததும் அதைப் பார்க்க அந்தப் பகுதியினர் கூடினர். சம்பவ இடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸார் புள்ளிமானை மீட்டு சிறிய லாரி மூலம் அதைக் காவல் நிலையத்துக்குக் கொண்டு வந்தனர். பின்னர் திருவள்ளூர் மாவட்ட வனத்துறைக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் அந்தப் புள்ளிமானை மீட்டு வனத்துறைக்கு கொண்டு சென்றுவிட்டனர்.

விபத்தில் சிக்கிய போலீஸ் ஏடிஜிபி -யின் கார் டிரைவர்- உயிருக்குப் போராடியவரை இன்னொரு கார் மோதிய சோகம்
வேடிக்கை பார்க்க வரும் பொதுமக்கள்
வேடிக்கை பார்க்க வரும் பொதுமக்கள்

இதுகுறித்து திருநின்றவூர் பகுதி மக்கள் கூறுகையில், ``கோடை காலம் என்பதால் வனப்பகுதிகளில் தண்ணீர் இல்லை. அதனால், திருநின்றவூரையொட்டி உள்ள வனப்பகுதிகளில் வாழும் புள்ளிமான்கள், தண்ணீரைத் தேடி ஊருக்குள் அடிக்கடி வருவது வாடிக்கையாகிவிட்டன.

திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 புள்ளிமான்கள் ஊருக்குள் வந்துவிட்டன. அதைப் பிடித்து மீண்டும் வனப்பகுதியில் விட்டுவருகின்றனர். ஆனால், வனப்பகுதியில் போதிய உணவு, தண்ணீர் இல்லாததால்தான் அடிக்கடி ஊருக்குள் புள்ளிமான்கள் வருகின்றன. எனவே, வனப்பகுதியில் வாழும் உயிரினங்களுக்குத் தேவையான உணவு, தண்ணீருக்கு வனத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும்" என்கின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு