Published:Updated:

``தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இனி தப்பமுடியாது" - திருவள்ளூர் எஸ்.பி வடிவமைத்த செயலி #Corona

திருவள்ளூர் எஸ்.பி அரவிந்தன் ஐ.பி.எஸ்
திருவள்ளூர் எஸ்.பி அரவிந்தன் ஐ.பி.எஸ்

திருவள்ளூர் எஸ்.பி அரவிந்தன் ஐ.பி.எஸ், கம்ப்யூட்டர் இன்ஜினீயர் என்பதால் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்க Co buddy என்ற செயலியை 48 மணி நேரத்தில் உருவாக்கி, அதைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. வெளிநாடுகளிலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள், வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் வீடுகளை அடையாளப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது என்று சுகாதாரத்துறையினர், காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அதையும் மீறி சிலர் வெளியில் சுதந்திரமாக சுற்றித் திரிவதால் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது.

`211 பேர் அட்மிட்; வெளியில் வந்தால் வழக்கு!' - சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட சந்தேக நபர்கள் #Corona
cobuddy செயலி
cobuddy செயலி

அதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. தமிழகத்தில் முதல் முறையாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி அரவிந்தன் ஐ.பி.எஸ் புதிய முயற்சியை எடுத்துள்ளார். கம்ப்யூட்டர் இன்ஜினீயரான அரவிந்தன் ஐ.பி.எஸ், Co buddy என்ற செயலியை இன்ஜினீயர் விஜய் ஞானதேசிகன் என்பவருடன் இணைந்து 48 மணி நேரத்தில் உருவாக்கியுள்ளார். இந்தச் செயலி, முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் செல்போன்களில் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை போலீஸார் கண்காணித்துவருகின்றனர்.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்தனிடம் பேசினோம். ``வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்களை அரசு, தனிமைப்படுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. அவர்களை போலீஸார் கண்காணித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 123 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களைக் கண்காணிக்கத்தான் cobuddy என்ற புதிய செயலியை உருவாக்கியுள்ளோம்.

செல்போனில் செக் செய்யும் எஸ்.பி அரவிந்தன்.
செல்போனில் செக் செய்யும் எஸ்.பி அரவிந்தன்.
`சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட 3,000 வீடுகள்!’ - `உள்ளே நுழையாதே’ ஸ்டிக்கர் ஒட்டும் மாநகராட்சி

திருவள்ளூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் செல்போனில் இந்தச் செயலியை டவுன்லோடு செய்துள்ளோம். அதனால் அவர்கள் வீடுகளிலேயே இருப்பதை செல்போன் மூலமே கண்காணித்துவிடலாம். ஒருவேளை செல்போனை வீட்டில் வைத்துவிட்டு வெளியில் சென்றால் அதையும் இந்தச் செயலி மூலம் கண்டறிந்துவிடலாம். சம்பந்தப்பட்டவர்களின் செல்போன்களுக்கு ரேண்டமாக அலர்ட் வரும் வசதி இந்தச் செயலியில் உள்ளது. அதனால் அலர்ட் வந்தவுடன் உடனடியாக அவர்கள் செல்ஃபி மூலம் தங்களின் புகைப்படங்களை எங்களுக்கு அனுப்ப வேண்டும். இல்லையெனில் அடுத்த சில நிமிடங்களில் எங்களுக்குத் தகவல் வந்துவிடும். உடனே போலீஸார் விசாரணையில் களமிறங்கிவிடுவார்கள்" என்றார்.

இந்தச் செயலியை உருவாக்கிய NotionTag Technologies-யின் தலைமைச் செயல் அலுவலர் விஜய் தேசிகனிடம் பேசினோம். ``ஜி.பி.எஸ் மூலம் ஒருவரின் இருப்பிடத்தைக் கண்டறிய வசதிகள் இன்றைய தகவல் தொழில்நுட்பத்தில் உள்ளன. ஆனால் co buddy செயலியில் புதிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். முதலில் Co buddy என்றால், co என்றால் கொரோனா என்றும், buddy என்றால் நண்பன் என்றும் அர்த்தம். தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு இந்தச் செயலி உதவி செய்யும் வகையில் உருவாக்கியிருக்கிறோம்.

Co buddy  செயலி
Co buddy செயலி
விஜய் ஞானதேசிகன்
விஜய் ஞானதேசிகன்

தனிமைப்படுத்தப்பட்டவர்களால் வெளியில் செல்ல முடியாது. அதனால் அவர்களின் தேவைகளை இந்தச் செயலி மூலம் தெரியப்படுத்தினால் உடனடியாக உதவி கிடைக்கும். மேலும், தனிமைப்படுத்தப்பட்டவர்களின் உடல் நலம் குறித்தும் சுகாதாரத்துறையினர் மற்றும் போலீஸார் தெரிந்துகொள்ளும் வசதியும் இந்தச் செயலியில் உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தைத் தொடர்ந்து திருநெல்வேலி, சேலம், பெரம்பலூர் உட்பட அனைத்து மாவட்டங்களில் விரைவில் இந்தச் செயலியை அறிமுகப்படுத்த தமிழக காவல் துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. இதன்மூலம் தமிழகம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டவர்களை எளிதில் கண்காணிக்க முடியும். அவர்களுக்கு இந்தச் செயலி ஒரு நண்பனைப் போல செயல்படும்" என்றார்.

மதுரையில் தனிமைப்படுத்தப்பட்ட துபாய் வாலிபர், தப்பி காதலி வீட்டுக்குச் சென்றார். தற்போது அவரையும் அவரின் காதலியையும் தனிமைப்படுத்தியுள்ளனர். இந்தச் செயலி தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்தினால், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்கின்றனர் போலீஸார்

திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி-யின் இந்தப் புதிய முயற்சிக்கு சக காவல் துறை அதிகாரிகள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் இந்தச் செயலியை செயல்படுத்தும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்தச் செயலி தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்தினால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்கின்றனர் போலீஸார்.

திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி-யின் இந்தப் புதிய முயற்சிக்கு சக காவல் துறை அதிகாரிகள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் இந்தச் செயலியை செயல்படுத்தும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

அடுத்த கட்டுரைக்கு