Published:Updated:

`கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றி!' - நெகிழ்ந்த திருவனந்தபுரம் கலெக்டர் #Corona

திருவனந்தபுரம், குமரி மாவட்ட கலெக்டர்கள் நடத்திய ஆலோசனை
திருவனந்தபுரம், குமரி மாவட்ட கலெக்டர்கள் நடத்திய ஆலோசனை

`டென்சன் ஆக வேண்டாம், அத்தியாவசிய சரக்குகளுகள் கொண்டுவருவது சுமுகமாக நடக்கும். கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி.’

கொரோனா வைரசை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 21- நாள்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தெருவில் இறங்கி நடப்பதற்கும், ஐந்து பேருக்கு மேல் கூடி நிற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில எல்லைகளும் மூடி சீல் வைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதுபோல மாவட்ட எல்லைகளும் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருள்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் கன்னியாகுமரி மாவட்டம் வழியாக களியக்காவிளை எல்லைதாண்டி கொண்டு செல்லப்படுகிறது.

கன்னியாகுமரி கலெக்டர், திருவனந்தபுரம் கலெக்டர் சந்திப்பு
கன்னியாகுமரி கலெக்டர், திருவனந்தபுரம் கலெக்டர் சந்திப்பு

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்கு அத்தியாவசிய பொருள்கள் கொண்டுசெல்லும் சரக்கு லாரிகள் அனுமதிக்கப்படுகின்றன. அதே சமயம் திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பொருள்களை இறக்கிவிட்டு காலியாக வரும் லாரிகளைக் கன்னியாகுமரி மாவட்ட எல்லைக்குள் போலீஸார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து திருவனந்தபுரம் கலெக்டர் கோபாலகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே மற்றும் குமதி எஸ்.பி ஸ்ரீநாத், திருவனந்தபுரம் ரூரல் எஸ்.பி அசோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து திருவனந்தபுரம் கலெக்டர் கோபால கிருஷ்ணன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். ``டென்சன் ஆக வேண்டாம், அத்தியாவசிய சரக்குகளுகள் கொண்டுவருவது சுமுகமாக நடக்கும். கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி" எனத் தொடங்கும் அந்தப் பதிவில் மேலும் கூறுகையில்,"நாடு முழுவதும் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருவனந்தபுரம் மாவட்டத்துக்கு அத்தியாவசிய பொருள்கள் தட்டுப்பாடு இல்லாமல் வழங்குவதை உறுதி செய்வதற்காகக் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர், எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.

திருவனந்தபுரம் கலெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் குமரி எஸ்.பி.ஸ்ரீநாத்
திருவனந்தபுரம் கலெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் குமரி எஸ்.பி.ஸ்ரீநாத்

திருவனந்தபுரத்தில் அத்தியாவசிய பொருள்களை இறக்கிவிட்டு நாகர்கோவில் செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை என்ற புகார் எழுந்ததைத் தொடர்ந்து இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக் கூட்டத்தில் திருவனந்தபுரத்தில் அத்தியாவசிய பொருள்கள் இறக்கிவிட்டுச் செல்லும் வாகனங்களை தடுக்க மாட்டோம் என கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே மற்றும் எஸ்.பி.ஸ்ரீநாத் ஆகியோர் உறுதி அளித்துள்ளனர்.

`இதுதான் சோஷியல் டிஸ்டன்ஸ்...!' - கொரோனா விழிப்புணர்வுப் புகைப்படம்! #Viral

சரக்கு வாகனங்களில் டிரைவர் உள்பட இரண்டுபேர் மட்டுமே பயணிக்க வேண்டும். பயணிகள் வாகனங்களுக்கு எல்லை தாண்டி பயணிக்க அனுமதி இல்லை. எல்லை தாண்டி நடந்து செல்பவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க இரண்டு மாநில பகுதிகளிலும் நடமாடும் பகுதி (பஃபர் சோன்) வரையறை செய்யப்படும். இரண்டு மாநில போலீஸாரும் சேர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளனர்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு