Published:Updated:

விதிமுறைகளை மீறித் தேர்த் திருவிழா: `முதல்வர் மாவட்டத்திலேயே இப்படியா?' - குமுறும் சமூக ஆர்வலர்கள்!

எண்கண் தேர்த் திருவிழா

கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துவருகிறார். இந்த நிலையில், அவரின் சொந்த மாவட்டமான திருவாரூரில் கொரோனா விதிமுறைகளை மீறி, தேர் திருவிழா நடத்தப்பட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

விதிமுறைகளை மீறித் தேர்த் திருவிழா: `முதல்வர் மாவட்டத்திலேயே இப்படியா?' - குமுறும் சமூக ஆர்வலர்கள்!

கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துவருகிறார். இந்த நிலையில், அவரின் சொந்த மாவட்டமான திருவாரூரில் கொரோனா விதிமுறைகளை மீறி, தேர் திருவிழா நடத்தப்பட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

Published:Updated:
எண்கண் தேர்த் திருவிழா

தமிழக மக்கள் கொரோனா விதிமுறைகளை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து வருகிறார். இந்த நிலையில்தான், அவரின் சொந்த மாவட்டமான திருவாரூரில் கொரோனா விதிமுறைகளை மீறி, தேர் திருவிழா நடத்தப்பட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

திருவாரூர் மாவட்டம் எண்கண் பகுதியில் அமைந்துள்ள முருகன் கோயில் மிகவும் பிரிசித்திபெற்றது. இந்தக் கோயில் பழனி, திருச்செந்தூர் முருகன் கோயில்களுக்கு நிகராக பிரசித்துப் பெற்றது. கொரோனா பரவல் காரணமாக, தமிழக அரசின் உத்தரவுக்கு இணங்க, இந்த ஆண்டு தைப்பூச தோரோட்டம் நடைபெறாது என இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் அறிவித்திருந்தார்கள். ஆனால் இந்தப் பகுதி மக்களே எதிர்பாராத விதமாக, இன்று காலை வெகு விமர்சையாக தேர் திருவிழா நடத்தினார்கள். இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. 500-க்கும் அதிமானவர்கள், தேரின் வடத்தை பிடித்து தேரோடும் வீதிகளில் தேரை இழுத்து வந்தார்கள். ஆங்காங்கே ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கூட்டம் முண்டியத்து நிரம்பி வழிந்தது. இவர்களில் பெரும்பாலோனோர் முகக்கவசம் அணியவில்லை. சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்கவில்லை.

தேர் திருவிழா
தேர் திருவிழா

இதனால் இந்தப் பகுதியில் கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடிய ஆபத்து ஏற்பட்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து நம்மிடம் மிகுந்த ஆதங்கத்தோடு பேசியவர்கள், ``தைப்பூசத்தை முன்னிட்டு தமிழ்நாட்டுல உள்ள முருகன் கோயில்கள்ல தேர் திருவிழா நடக்குறது வழக்கம். ஆனால் இப்ப கொரோனா பரவல் காரணமாக, கோயில்கள்ல பொதுமக்கள் கலந்து கொள்ளக்கூடிய எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடத்தக்கூடாதுனு தமிழக அரசு உத்தரவு போட்டுருக்கு. ஏதேனும் முக்கியமான விஷேச நாள்களாகவே இருந்தாலும் கூட, கோயில் உள்ளார சாமிக்கு குருக்கள் பூஜை செய்யலாம். அதுலயும் பொதுமக்கள் கூட அனுமதிக்க கூடாது விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கு. இதனால் தான் இந்த வருசம் தைப்பூசத்துக்கு, பழனி, திருச்செந்தூர் முருகன் கோயில்கள்ல தங்க தேர் இழுக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

எண்கண் முருகன் கோயில்லயும் கூட தேர் பவனி கிடையாதுனு தான் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் அறிவிச்சிருந்தாங்க. ஆனால் இந்த பகுதியில் உள்ள தி.மு.க பிரமுகர்கள் தங்களோட அதிகாரித்தையும் செல்வாக்கையும் பொதுமக்கள்கிட்ட காட்டுறதுக்காகவே, தேர் திருவிழாவை நடத்தியே ஆகணும்னு அதிகாரிகள்கிட்ட வாக்குவாதம் பண்ணி, தேர் திருவிழாவை நடத்தியிருக்காங்க. இதுல என்ன கொடுமைனா, இந்த பகுதியைச் சேர்ந்த தி.மு.க பிரமுகருக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செஞ்ச பிறகுதான் , தேரையே இழுக்க ஆரம்பிச்சாங்க. ஏகப்பட்ட கூட்டம். இதுல பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணியவே இல்லை, இது மிக மோசமான அத்துமீறல். அதிகார துஷ்பிரயோகம். ஜல்லிக்கட்டுல 150 பேருக்குதான் அனுமதி. அதுவும் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டுருக்கணும்னு தமிழக அரசு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதிச்சிருந்துச்சு, ஆனால் இங்க ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஒரே இடத்துல முண்டியடிச்சிக்கிட்டு இருந்தாங்க. இதுல போலீஸ்காரங்க பாதுகாப்பு பணிகள்ல ஈடுபட்டிருந்தது இன்னும் கொடுமையான விஷயம், அரசு அதிகாரிகள் பலரும் கூட இதுல கலந்துக்கிட்டாங்க. முதல்வரோட சொந்த மாவட்டத்துலயே இப்படி வீதிமிறல் நடந்துச்சுனா, மற்ற பகுதிகள்லயும் இது தவறான முன்னுதாராணம் ஆயிடும். இதனால் கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடிய ஆபத்து இருக்கு, இதுக்கு காரணமாக இருந்த திமுக பிரமுகர்கள் மீது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கணும்" என்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism