Published:Updated:

இரவில் மாயமான சிறுவன்; விடிவதற்குள் கண்டுபிடித்த காவல்துறை! - கண்ணீருடன் நன்றி தெரிவித்த பெற்றோர்

மாணவன் சாய்ராம்
மாணவன் சாய்ராம்

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், சிறுவன் சாய்ராமை உடனடியாகத் தேடிக் கண்டுப்பிடிக்க, காவல்துறையினரை தீவிரமாக முடுக்கிவிட்டிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவாரூரில் இரவு நேரத்தில் வீட்டைவிட்டு வெளியேறி காணாமல்போன சிறுவனை, காவல்துறையினர் விடிய விடிய தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு, விடிவதற்குள் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஓப்படைத்த சம்பவம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் காவல்துறைக்கு பாராட்டுகளைப் பெற்றுத் தந்துள்ளது.

இரவில் மாயமான சிறுவன்; விடிவதற்குள் கண்டுபிடித்த  காவல்துறை! - கண்ணீருடன் நன்றி தெரிவித்த பெற்றோர்

திருவாரூரிலுள்ள தியாகராஜ நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சாய்ராம். நேற்று முன்தினம் இரவு இந்தச் சிறுவன், தன் பெற்றோரிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தால், கோபமடைந்து வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார். தங்கள் மகன் சாய்ராம், எங்கு சென்றிருப்பார் என்பது குறித்து பெற்றோருக்கு எந்த ஒரு தகவலும் தெரியவில்லை. இதனால் பதற்றமடைந்த சாய்ராமின் பெற்றோர் திருவாரூர் மாவட்ட காவல்துறையின் தனிப்பிரிவு அலுவலகத்துக்கு நள்ளிரவு 1:30 மணிக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், சிறுவன் சாய்ராமை உடனடியாகத் தேடிக் கண்டுபிடிக்க, காவல்துறையினரைத் தீவிரமாக முடுக்கிவிட்டிருக்கிறார். அந்த நள்ளிரவு நேரத்திலும் காவல்துறையினர் தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். தேடுதல் பணியை தீவிரப்படுத்தி சிறுவனைக் கண்டுபிடிக்க விரைந்து செயல்பட்டனர். குறிப்பாக இரவு ரோந்து காவல் அதிகாரிகளும் ரோந்து காவலர்களும் பல்வேறு இடங்களுக்குச் சென்று, சாய்ராமை தேடியிருக்கிறார்கள்.

இரவில் மாயமான சிறுவன்; விடிவதற்குள் கண்டுபிடித்த  காவல்துறை! - கண்ணீருடன் நன்றி தெரிவித்த பெற்றோர்

இந்தநிலையில், வெளியூர் செல்ல திட்டமிட்டு திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகில் பதுங்கியிருந்த சிறுவன் சாய்ராமை திருவாரூர் நெடுஞ்சாலை ரோந்து காவலர்கள் அதிகாலை 3:00 மணியளவில் மீட்டு பெற்றோர் வசம் ஒப்படைத்தனர். இதில் சிறப்பாகச் செயல்பட்டு, மாணவன் சாய்ராமை விரைவாகக் கண்டுபிடித்த, இரவு ரோந்து அதிகாரிகள், காவலர்கள், திருவாரூர் நெடுஞ்சாலை ரோந்து காவலர்கள் ஆகியோருக்கு திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் பாராட்டு தெரிவித்தார். காவல்துறையினருக்கு சிறுவனின் பெற்றோர் கண்ணீருடன் நன்றி தெரிவித்தார்கள்.

திருவாரூர்: அரசியல் பிரமுகர் கொலை வழக்கு; 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு