Published:Updated:

`ஆதரவற்ற மக்களின் பசியாற்றும் ராஜஸ்தான் குடும்பம்! - மனிதம் போற்றும் கோவை

ராஜஸ்தான் குடும்பம்
ராஜஸ்தான் குடும்பம்

கோவை ஆதரவற்ற மக்களுக்கு ராஜஸ்தான் குடும்பத்தினர் உணவளித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சாலையோரம் உள்ள ஆதரவற்ற மக்களுக்கு, அரசுடன் இணைந்து பல நல்ல உள்ளங்கள் உணவளித்து உதவி வருகின்றனர்.

ராஜஸ்தான் குடும்பம்
ராஜஸ்தான் குடும்பம்

இந்நிலையில், கோவை பூமார்க்கெட் பகுதியில் உள்ள மதன்லால் என்ற தொழிலதிபர் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து வீட்டிலேயே, உணவு, டீ போன்றவற்றை சமைத்து அதை, தங்களது கையாலேயே ஆதவற்ற மக்களுக்கு பரிமாறி வருகின்றனர்.

இதுகுறித்து மதன்லால், “ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர்தான் எங்களது பூர்வீகம். 2004-ம் ஆண்டு கோவை வந்தோம். பிளைவுட் கடை நடத்தி வருகிறேன். எப்போதுமே எங்களாலான உதவியை செய்து வருகிறோம். இப்போது ஊரே அடங்கிப் போயிருக்கும் நிலையில், ஆதரவற்ற மக்களை நினைத்து வருத்தமாக இருந்தது. அதனால், எங்களால் முடிந்த அளவுக்கு சாப்பாடு, டீ, பிஸ்கெட் போன்றவற்றைக் கொடுத்து வருகிறோம்.

ஆதரவற்றவருக்கு உதவும் ராஜஸ்தான் குடும்பம்
ஆதரவற்றவருக்கு உதவும் ராஜஸ்தான் குடும்பம்

இன்னும் நிறைய உதவ வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், கடைகளில் பொருள்கள் கிடைப்பதில்லை. எங்களாலான உதவியை செய்துகொண்டே இருப்போம்” என்றார்.

“அரசாங்கம் இதுபோன்ற மக்களுக்கு ஒவ்வொரு பகுதியிலும் காப்பகம் அமைத்து, அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும். மாஸ்க், சானிடைஸசர் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் இவர்களுக்கும் வழங்க வேண்டும்.

ராஜஸ்தான் குடும்பம்
ராஜஸ்தான் குடும்பம்

அதற்கான பணிகளில் நாங்களும் ஈடுபடப்போகிறோம். ஒவ்வொருவருமே தங்களாலான உதவியை செய்ய முன்வர வேண்டும்” என்கிறார் மதன்லாலின் மகன் மஹிபால்.

அடுத்த கட்டுரைக்கு