Published:Updated:

`சாலை வசதியில்லாததால் யாரும் பெண் கொடுப்பதில்லை!’ -தமிழகத்தில் இப்படியும் ஒரு மலைகிராமம்

நெக்னாமலை கிராமம்
News
நெக்னாமலை கிராமம்

`சாலை வசதியில்லாததால், வெளியிலிருந்து யாரும் பெண் கொடுப்பதுமில்லை, பெண் எடுப்பதுமில்லை’ என்ற மனக் குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர், நெக்னாமலை கிராம மக்கள்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்துள்ள நெக்னாமலை கிராமத்தைச் சேர்ந்த முனிசாமி (25) என்ற இளைஞர், கோவையில் நேற்று முன்தினம் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரின் சடலம் நேற்றிரவு 10 மணியளவில் நெக்னாமலை அடிவாரத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அடிவாரத்திலிருந்து 1,500 மீட்டர் உச்சியில் உள்ள மலை கிராமத்துக்கு சாலை வசதியில்லாததால் டோலி கட்டி சடலத்தைச் சுமந்து சென்றனர். 

டோலி கட்டி சடலத்தைத் தூக்கிச்செல்லும் அவலம்
டோலி கட்டி சடலத்தைத் தூக்கிச்செல்லும் அவலம்

உயிரிழந்த முனிசாமியின் மனைவி அனிதா (22) கர்ப்பிணி என்பதால் அவரையும் டோலி கட்டி தூக்கிச் சென்றனர். தீப்பந்த வெளிச்சத்திலேயே இன்று அதிகாலை 3 மணியளவில் மலை உச்சிக்குச் சென்று சேர்ந்தனர். இந்தச் சம்பவம், ஊடகங்களில் செய்தியாக வெளியாகி பலத் தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நெக்னாமலையில் நிலவும் பிரச்னைகள் குறித்து அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் முனிசாமி, நம்மிடம் விரிவாகக் கூறினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``நெக்னாமலையில் 167 குடும்பங்கள் உள்ளன. எங்கள் கிராமம் இருப்பதே பல அதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் தெரியாது. சாலை வசதி கேட்டு காலம் காலமாகப் போராட்டம் செய்துவருகிறோம். தேர்தலைப் புறக்கணித்தோம். மனு கொடுத்தோம். வாழ்வாதாரம் பின்தங்கிய நிலையில் உள்ள எங்கள் பகுதியை இதுநாள் வரை யாருமே கண்டுகொள்ளவில்லை. இரு சக்கர வாகனம் செல்லும் வகையில் இளைஞர்களே திரண்டு சாலை அமைக்க முற்பட்டோம்.

ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் முனிசாமி
ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் முனிசாமி

வனத்துறை அதிகாரிகள் தடுத்து மிரட்டினர். கல்வியும் கிடைக்கவில்லை. படிப்பறிவுக்காகப் பலர் இடம்பெயர்ந்துவிட்டார்கள். விவசாயத்தைச் சார்ந்துதான் நாங்கள் வாழ்ந்துவருகிறோம். அரசு நான்கு கிணறுகளை வெட்டிக் கொடுத்துள்ளது. அதற்கு பைப்லைன் அமைத்துத் தரவில்லை. கயிறு மூலம் குடத்தைக் கட்டி தண்ணீர் எடுக்கிறோம். குடியிருப்புக்கும் கிணறு இருக்கும் பகுதிக்கும் வெகு தூரம் உள்ளது. பெண்கள் தலையில்தான் தண்ணீர் சுமந்துவருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எங்கள் கிராமத்தில் பெண் கொடுக்கவும் பெண் எடுக்கவும் யாரும் விரும்புவதில்லை. திருமணமாகாமல் 10-க்கும் மேற்பட்ட முதிர் கன்னிகளும் இளைஞர்களும் உள்ளனர். மலையில் எப்படி வாழ முடியும், படிப்பறிவு இல்லை, வசதி வாய்ப்புகள் இல்லை போன்ற காரணங்களால் பெண் கொடுப்பதில்லை. வரதட்சணை காரணமாக யாரும் பெண் எடுப்பதுமில்லை. இளமையைத் தொலைத்த இளைஞர்களும் இளம்பெண்களும் மன உளைச்சலில் உள்ளனர்.

கரடு முரடான பாதையில் செல்லும் மக்கள்
கரடு முரடான பாதையில் செல்லும் மக்கள்

எங்கள் பகுதிக்கான அடிப்படை வசதிகளை முறையாகவும் சட்ட ரீதியாகவும்தான் கேட்கிறோம். 1980-ல் இரண்டு மீட்டர் வழியை வனத்துறையே கொடுத்தது. அந்த வழியை ஆட்டோ செல்லும் அளவுக்கு பொக்லைன் வைத்துச் சரிசெய்யப் பார்த்தோம். ‘இப்போது, உங்களுக்கு வழியே இல்லை’ என்று வனத்துறை அதிகாரிகள் அடாவடித்தனம் செய்கிறார்கள். எங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றத் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார் உருக்கமாக.