Published:Updated:

`சுரங்கப்பாதையில் நீரூற்று; 12 கி.மீ தூரம் சுற்றிச் செல்கிறோம்!'- வேதனையில் தூத்துக்குடி மக்கள்

``தூத்துக்குடியில் ரயில்வே சுரங்கப்பாதையில் நீரூற்று ஏற்பட்டு தேங்கி நிற்கும் தண்ணீரால் 12 கி.மீ தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் சுரங்கப்பாதை அமைத்தும் பலனில்லை” எனப் புலம்புகின்றனர் கிராம மக்கள்.

சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் ஊற்று நீர்
சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் ஊற்று நீர்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ளது கிளாக்குளம். இந்த கிராமத்தைச் சுற்றி 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமத்தின் அருகில் ரயில்வே கிராசிங் ஒன்று உள்ளது. கடந்த டிசம்பர் 2012-ல் இதே ஊரைச் சேர்ந்த புனிதா என்ற 13 வயது பள்ளி மாணவி பள்ளி சென்று திரும்பும் போது, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

`தாயின் மரணம்... 7 வயதில் பாலியல் வன்கொடுமை'- வீழ்ந்த போதெல்லாம் விருட்சமாக எழுந்த நட்டாஷா!

டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சில நாள்களில் நடந்த இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

அதன் பின்னர், ஊர் மக்களின் கோரிக்கையால் இந்த ஆளில்லா ரயில்வே கேட், ஆள் உள்ள ரயில்வே கேட்டாக மாற்றப்பட்டது. தொடர்ந்து, அப்பகுதியில் பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டில் பாலம் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டு, சுரங்கப்பாதை அமைக்கும் பணியும் 80 சதவிகிதம் நிறைவு பெற்றது.

தேங்கி நிற்கும்  மழைநீர்
தேங்கி நிற்கும் மழைநீர்

இந்தச் சுரங்கப்பாதையில் ஆரம்பத்தில் ஏற்பட்ட நீரூற்றை தற்போதுவரை நிறுத்த முடியவில்லை. இதனால் பாதை பலனற்றதாகி விட்டதாகக் குற்றம்சாட்டியும், இதனால் 12 கி.மீ தூரம் வரை சுற்றிச் செல்வதாகவும் கூறி பல போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் கிராம மக்கள். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ``எங்கோட கிளாக்குளம் கிராமத்துல இருந்து பிழைப்பிற்காக பல ஊர்களுக்கு தினமும் போய்ட்டு வர்றோம்.

'பீடி, சாராயம் எங்க ஊருக்குள்ள கிடையாது'- 200 வருட சத்தியத்தைக் காப்பாற்றும் கிராம மக்கள்!

இங்கு அமைக்கப்பட்டுள்ள ரயில்வே பாலத்தின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கப்பதற்கான வேலைகள் தொடங்கிய போதே நீரூற்று காணப்பட்டது. பாசனத்திற்காக தாமிபரணியிலிருந்து தண்ணீர் விடப்பட்ட போதும் நீரூற்று அதிகமானது. ஆனால், இதைப் பொருட்படுத்தாமல் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

ரயில்வே பாதை
ரயில்வே பாதை

80 சதவிகிதப் பணிகள் முடிவடைந்தும் தினமும் நீரூற்றால் 5 அடி வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. மறுநாள் காலையில் மோட்டார் மூலம் இந்தத் தண்ணீர் உறிஞ்சப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது. மீண்டும் இரவில் தண்ணீர் ஊறிவிடும். மீண்டும் மோட்டார் மூலம் வெளியேற்றப்படும். இப்படியாக தொடர்கிறது. தற்போது பெய்து வரும் மழையால் சுரங்கப்பாதையில் 10 அடி உயரத்திற்குப் பெருகி நிற்கிறது. இதனால் ஊர்மக்கள் வெளியே வர முடியவில்லை.

இதனால், 12 கி.மீட்டர் தூரம் வரை சுற்றி வருகிறோம். பள்ளிக் குழந்தைகளும் சுற்றியே சென்று வருகிறார்கள். இருசக்கர வாகனங்களில் செல்வோர், சில நேரங்களில் ரயில் வருவதுகூட தெரியாமல் தண்டவாளத்தைத் தாண்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் மழை நீர்
சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் மழை நீர்

ஆரம்பத்திலேயே நீரூற்று தென்பட்டவுடனேயே பணிகளை நிறுத்தி மாற்று நடவடிக்கை எடுத்திருக்கலாம். தற்போது தொடரும் நீரூற்றால் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டும் பலனில்லாமலே உள்ளது” என்கின்றனர் வேதனையுடன்.