Published:Updated:

நீலகிரி: நிறுத்தப்பட்ட மூன்று குழந்தைத் திருமணங்கள்; சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் சேர்ப்பு!

குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

ஊட்டியில் நடைபெறவிருந்த மூன்று குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தி, 3 சிறுவர்களைக் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொரோனா ஊரடங்கிற்குப்பின் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன. நடப்பாண்டில் தற்போது வரை நீலகிரியில் 40 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க முடியாமல் மாவட்ட நிர்வாகம் திணறி வருகிறது.

Ooty
Ooty

இந்த நிலையில்,ஊட்டியில் கடந்த இரண்டு நாள்களில் 3 குழந்தை திருமணங்கள் நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகளுக்குப் புகார்கள் வந்தன. இந்தப் புகாரின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு குழந்தைத் திருமணம் செய்ய முயன்ற 18 வயது பூர்த்தியடையாத 3 சிறுவர்களைக் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். இதற்கு ஆதரவாக செயல்பட்ட பெற்றோர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து சைல்டு லைன் தரப்பில் பேசினோம் ,"ஊரடங்கு காலத்தில் 18 வயது பூர்த்தியடையாத சிறுமிகளிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி கடத்தி சென்று திருமணம் செய்வது மற்றும் பெற்றோரே வறுமையைக் காரணம் காட்டி குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைப்பது அதிகரித்து வருகிறது.

child abuse (Representational Image)
child abuse (Representational Image)

நடப்பாண்டில் தற்போது வரை,குழந்தை திருமண தடைச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அனைத்து மகளிர் காவல்துறை உதவியுடன், சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தி குழந்தை திருமணங்களை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு