Published:Updated:

`கொரோனாவால புராஜெக்ட் கேன்சல்... நீங்க வேலைக்கு வரவேணாம்!’ - 3 பேரை வீட்டுக்கு அனுப்பிய நிறுவனம்

கொரோனா
கொரோனா

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள நிறுவனம் ஒன்று 3 பேரை வேலையைவிட்டு அனுப்பியுள்ளது.

கொரோனா வைரஸ் பெரும் அச்சறுத்தலாக மாறியிருக்கிறது. பலரது இயல்பு வாழ்க்கையையும் பாதித்துள்ளது. நேரடியாகவும் மறைமுகமாகவும் பலரது வேலை வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல நாடுகளில் பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னையிலுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று, கொரோனாவால் தொழில் முடங்கியதைக் காரணமாகக் கூறி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த 3 பேரை வேலையிலிருந்து நீக்கியுள்ளது. சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஐ.டி பார்க்கில் உள்ளது அந்த ஸ்டார்ட் அப் நிறுவனம். UK வில் உள்ள ஒரு பிரபல ஆடை நிறுவனத்துக்கான டிசைன்களைத் தயார் செய்து வழங்கி வந்தது.

கொரோனா
கொரோனா

2 மாதங்களுக்கு முன் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் 3 பேரை UK நிறுவனத்துக்கான டிசைனிங் பணிகளுக்காக வேலைக்கு எடுத்துள்ளது. கொரோனா காரணமாக UK நிறுவனத்தின் புராஜெக்ட் கேன்சல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 2 நாள்களுக்குமுன், புதிதாக வேலைக்குச் சேர்த்த அந்த 3 நபர்களையும் வேலையைவிட்டு நீக்கியுள்ளது. அவர்களுக்கு அனுப்பிய மெயிலில், கொரோனாவால் புராஜெக்ட் கேன்சலானதைக் காரணமாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வேலையிழந்த ஊழியரிடம் பேசினோம். ``வேற ஒரு கம்பெனியில வேலை செஞ்சுட்டு 2 மாசத்துக்கு முன்னாடிதான் இங்க சேந்தோம். என் கூட வேலையிழந்த 2 பேரும் 10 வருசம் அனுபவம் உள்ளவங்க. திடீர்னு கொரோனாவால UK ல புராஜெக்ட் கேன்சல் ஆயிருச்சுனு வேலையைவிட்டு போகச் சொல்லிட்டாங்க. நோட்டீஸ் பீரியட் கூடத் தரலை" என்றார் வேதனையுடன்.

அடுத்த கட்டுரைக்கு