Published:Updated:

தென்காசி: கரடித் தாக்குதலில் சிக்கிய மூவர்... இருவருக்குப் பார்வை பறிபோகும் ஆபத்து - நடந்தது என்ன?

கரடித் தாக்குதலில் காயமடைந்தவருக்கு உதவி

``கரடி உள்ளிட்ட காட்டு விலங்குகளிடம் கவனமாக இருக்க வேண்டும். அவற்றை அச்சுறுத்தும் வகையிலோ அல்லது கோபத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையிலோ ஈடுபடக் கூடாது” என வனத்துறை அதிகாரி கேட்டுக்கொண்டார்.

தென்காசி: கரடித் தாக்குதலில் சிக்கிய மூவர்... இருவருக்குப் பார்வை பறிபோகும் ஆபத்து - நடந்தது என்ன?

``கரடி உள்ளிட்ட காட்டு விலங்குகளிடம் கவனமாக இருக்க வேண்டும். அவற்றை அச்சுறுத்தும் வகையிலோ அல்லது கோபத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையிலோ ஈடுபடக் கூடாது” என வனத்துறை அதிகாரி கேட்டுக்கொண்டார்.

Published:Updated:
கரடித் தாக்குதலில் காயமடைந்தவருக்கு உதவி

மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருக்கும் பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமத்துக்கு மசாலா விற்பனை செய்வதற்காக வியாபாரி வைகுண்டமணி என்பவர் வந்தபோது சாலையோரத்தில் பதுங்கியிருந்த கரடி அவரின் பைக் மீது பாய்ந்திருக்கிறது. அதில் நிலைகுலைந்து கீழே விழுந்தவரை, கரடி தாக்கியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

பதற்றத்தில் பொதுமக்கள்
பதற்றத்தில் பொதுமக்கள்

அவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அந்த வழியாகச் சென்றவர், ஊருக்குள் சென்று ஆட்களை அழைத்து வந்திருக்கிறர். கற்கள், கம்புகளுடன் வந்து கரடியை விரட்டும் முயற்சியில் கிராம மக்கள் ஈடுபட்டனர். அதனால் கோபமடைந்த கரடி சைலப்பன் என்பவர் மீது பாய்ந்திருக்கிறது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சைலப்பனின் அண்ணன் நாகேந்திரன் கரடியை விரட்ட கம்புடன் பாய்ந்திருக்கிறார்.

கரடி மூவரையும் கடுமையாகத் தாக்கியிருக்கிறது. அதனால் மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், அங்கு கூடியிருந்த மக்கள் மீதும் பாய்ந்ததால் அலறியடித்துத் தப்பியோடியுள்ளனர். அவர்களில், சிலர் தரையில் விழுந்து எழுந்ததில் நான்கு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. பலத்த காயமடைந்த மூவரும் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

ஆம்புலன்ஸ் வாகனத்தில் காயமடைந்தவர்கள்
ஆம்புலன்ஸ் வாகனத்தில் காயமடைந்தவர்கள்

மசாலா வியாபாரி வைகுண்டமணிக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டிருக்கிறது. சைலப்பனுக்கு ஒரு கண், வாய், மூக்கு ஆகியவை பாதிக்கப்பட்டன. நாகேந்திரனுக்கு இரு கண்களிலும் பலத்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அவரது மூக்கு, வாய் ஆகியவையும் கிழிந்துவிட்டன. அவருக்குப்பார்வை கிடைக்குமா என்பதை உடனடியாகச் சொல்ல முடியாது என்று மருத்துவர்கள் கைவிரிக்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களை தென்காசி மாவட்ட தி.மு.க செயலாளர் சிவபத்மநாதன், கடையம் ஒன்றியச் செயலாளர் ஜெயகுமார் உள்ளிடோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்களின் சார்பாக தலா 15,000 ரூபாய் வழங்கினார்கள். வனத்துறையின் சார்பாக அவர்களுக்கு கூடுதல் நிதியுதவி கிடைக்க அதிகாரிகளிடம் பேசி ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தி.மு.க சார்பில் நிதியுதவி
பாதிக்கப்பட்டவர்களுக்கு தி.மு.க சார்பில் நிதியுதவி

இதற்கிடையே, புதிய தமிழகம் கட்சித் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். அத்துடன் காயமடைந்தவர்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட உயர்தர சிகிச்சை கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என அரசை வலியுறுத்தியிருக்கிறார்.

இந்தச் சம்பவம் பற்றி முண்டந்துறை வனச்சரக துணை இயக்குநரான செண்பக பிரியா கூறுகையில், “பொதுமக்களை கரடி தாக்குவது அரிதாகவே நடக்கும். அதன் கால் நகங்கள் கூர்மையாக இருப்பதால் கரடி மிகவும் ஆபத்தானது. அதனால் அதனிடம் கவனமாக இருக்க வேண்டும்.

துணை இயக்குநர் செண்பக பிரியா
துணை இயக்குநர் செண்பக பிரியா

கரடி போன்ற ஆபத்தான வனவிலங்குகள் அருகில் வந்தால் அதைத் துன்புறுத்தும் வகையிலோ, அச்சுறுத்தும் வகையிலோ நடந்துகொள்ளக் கூடாது. கிராமம் அமைந்திருக்கும் பகுதியில் 15 கி.மீ தூரத்துக்கு சோலார் மின்வேலி அமைத்திருக்கிறோம். மீதியுள்ள இடங்களிலும் சோலார் மின்வேலி அமைக்கப்படும். தேவையான இடங்களில் அகழி அமைத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.