Published:Updated:

`கொரோனாவிலிருந்து மீண்ட 3 பேர்; உற்சாகப்படுத்திய மருத்துவர்கள்!’ -வேலூர் அப்டேட்

கொரோனாவிலிருந்து குணமடைந்த நபர்கள்
கொரோனாவிலிருந்து குணமடைந்த நபர்கள்

வேலூரில், கொரோனா தொற்றிலிருந்து மீண்ட மூன்று பேரை மாவட்ட கலெக்டரும் மருத்துவர்களும் கைதட்டி மகிழ்வித்து வழியனுப்பிவைத்தனர்.

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சின்ன அல்லாபுரம், ஆர்.என்.பாளையம், கருகம்புத்தூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று பேர் இரண்டு வாரங்களுக்கு முன் தொற்று அறிகுறியுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவப் பரிசோதனையில், அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

கொரோனாவிலிருந்து குணமடைந்த நபர்கள்
கொரோனாவிலிருந்து குணமடைந்த நபர்கள்

பின்னர், அரசு மருத்துவமனையின் சிறப்பு சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, மருத்துவர்களுடைய தீவிர கண்காணிப்பில் இருந்தனர். இந்த நிலையில், அவர்கள் மூன்று பேரும் பூரணமாகக் குணமடைந்துள்ளனர். எனினும், அவர்களின் ரத்த மாதிரிகள் தொடர்ந்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. தொற்றிலிருந்து அவர்கள் மீண்டது உறுதிசெய்யப்பட்ட பிறகு, இன்று 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரவர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம், எஸ்பி பிரவேஷ்குமார் கலந்துகொண்டு, மீண்டு வந்த மூன்று பேருக்கும் கூடை நிறைய பழங்களைக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், கரவோசையுடன் அவர்களை வீடுகளுக்கு அனுப்பிவைத்தனர்.

கொரோனாவிலிருந்து குணமடைந்த நபர்கள்
கொரோனாவிலிருந்து குணமடைந்த நபர்கள்

இதில், அரசு மருத்துவமனை டீன் செல்வி, சுகாதாரத்துறை துணை இயக்குநர் மணிவண்ணன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் பலரும் கலந்துகொண்டு அவர்களைக் கைதட்டி உற்சாகப்படுத்தினர். அடுத்த சில நாள்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அவர்களிடம் அறிவுறுத்தியுள்ளனர். குணமடைந்த மூன்று பேரும் தமிழக அரசுக்கும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு