Published:Updated:

புலிக்குட்டிக்கு காயம்... வேட்டை பயிற்சியில் பின்னடைவு... அடுத்து செய்ய வேண்டியது என்ன?

புலி

ஆனைமலை புலிகள் காப்பகம் பாதுகாப்பு அரணில் வைக்கப்பட்டுள்ள, புலிக்குட்டிக்கு பல் பகுதி பாதிக்கப்பட்டுள்ளதால் பயிற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

புலிக்குட்டிக்கு காயம்... வேட்டை பயிற்சியில் பின்னடைவு... அடுத்து செய்ய வேண்டியது என்ன?

ஆனைமலை புலிகள் காப்பகம் பாதுகாப்பு அரணில் வைக்கப்பட்டுள்ள, புலிக்குட்டிக்கு பல் பகுதி பாதிக்கப்பட்டுள்ளதால் பயிற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Published:Updated:
புலி

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கடந்த ஆண்டு பிறந்து 8 மாதமே ஆன புலிக்குட்டி காயங்களுடன் மீட்கப்பட்டது. தாயை பிரிந்து இருந்ததால், வனத்துறையினரே அந்தப் புலியை பாதுகாத்து சிகிச்சை அளித்து வந்தனர். சிறிது காலம் கூண்டில் வைத்து பராமரித்து வந்தநிலையில்,

புலி மீட்கப்பட்டபோது
புலி மீட்கப்பட்டபோது

தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக பாதுகாப்பு அரண் அமைத்து அந்தப் புலிக்கு வேட்டை பயிற்சி கொடுக்க வனத்துறை முடிவு செய்தது. இதற்காக மானாம்பள்ளி வனச்சரகம், மந்திரிமட்டம் என்ற பகுதியில் 10,000 சதுர அடி அரண் அமைக்கப்பட்டு, கடந்த ஜூன் மாதம் முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வேட்டையாட தெரியாத புலிக்கு வேட்டை பயிற்சி அளித்தபோது, மேல் தாடை வேட்டை பல் உடைந்துவிட்டது. அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், புலியின் கண் பார்வையில் மனிதர்கள் படாமல் இருப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருந்தன.

புலி
புலி

முயல், குட்டிப்பன்றி உள்ளிட்ட 6 வகையான விலங்குகளை முதல்கட்டமாக புலி வேட்டையாடியிருந்தது. நன்கு பயிற்சி பெற்றதும் புலியை மீண்டும் வனப்பகுதியில் விட வனத்துறை திட்டமிட்டிருந்தது.

இதனிடையே அடுத்தடுத்து பயிற்சிக்காக புலி மற்ற விலங்குகளை வேட்டையாடும்போது, வேட்டையாடுவதற்கு மிகவும் உதவும் பல் ஒன்று பாதிக்கப்பட்டது.  பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க, சீழ் பிடித்து புலி சாப்பிட முடியாமல் தவித்தது. இந்த நிலை தொடர்ந்தால் புலிக்கு எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்கள் உருவாகும் என்று கூறப்பட்டது.

புலி
புலி

இதையடுத்து புலிக்கு சிகிச்சையளிக்க வனத்துறை முடிவு செய்தது. அதன்படி ஆனைமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், வண்டலூர் உயிரியல் பூங்கா ஆகிய மருத்துவக் குழுவினர் இணைந்து சிகிச்சையளித்தனர்.

கிட்டத்தட்ட நாலரை மணிநேரம் போராடி, பாதிக்கப்பட்டிருந்த புலிக்கு சிகிச்சையளித்தனர். சிகிச்சைக்குப் பிறகு, புலி மீண்டும் கூண்டில் விடப்பட்டுள்ளதாகவும், அதன் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக இந்த முயற்சிக்கு வரவேற்பு இருந்தாலும், புலியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் இதற்கு எதிர்ப்புகளும் வலுத்துள்ளன.

புலிக்கு சிகிச்சை
புலிக்கு சிகிச்சை

இதுகுறித்து வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், ``பொதுவாக இதுபோன்று தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டிகளை மீட்டு உயிரியல் பூங்காக்களில்தான் விடுவார்கள். ஆயுள் முழுவதும் கூண்டுக்குள்தான் இருக்க வேண்டும்.

அந்த வகையில் அதை மீண்டும் கூண்டில் விடுவது என்பது நிச்சயம் வரவேற்கத்தக்கது. ஆனால், இது மிகவும் கடினமான விஷயம். இந்தியாவில் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மாநிலங்களில்தான் இந்தப் பயிற்சி அதிகம் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் 20 புலிகளுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது.

புலி
புலி

அவற்றில் 5 தான் வெற்றியடைந்துள்ளன. தற்போதைய சூழ்நிலைக்கு புலி குணமடைந்ததும் மீண்டும் பாதுகாப்பு அரணில் விடுவோம் என வனத்துறை கூறியுள்ளது. எதுவாக இருந்தாலும் புலியின் உடல்நலனை கருத்தில் கொண்டுதான் முடிவு எடுக்க வேண்டும்” என்றனர்.