Published:Updated:

`குறைந்த சத்தம்... துல்லியமாகத் தாக்கும் திறன்'- திருச்சியில் தயாரிக்கப்பட்ட புதிய ரகத் துப்பாக்கி!

துப்பாக்கி
துப்பாக்கி

அசால்ட் ரைஃபிள் மற்றும் ஏ.கே-47- னின் உதிரி பாகங்களை இதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதுதான் இதன் கூடுதல் சிறப்பு.

துப்பாக்கிச்சூட்டின்போது வெளிச்சத்தையும் சத்தத்தையும் குறைத்து, நீண்ட தூர இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் திறன்கொண்ட 'கார்பைன்' என்கிற புதிய ரகத் துப்பாக்கியை அறிமுகப்படுத்தி அசத்தியிருக்கிறது துப்பாக்கித் தொழிற்சாலை.

துப்பாக்கித் தொழிற்சாலை
துப்பாக்கித் தொழிற்சாலை

திருச்சி மாவட்டம், நவல்பட்டிலுள்ள துப்பாக்கித் தொழிற்சாலையில், `திருச்சி கார்பைன்’ என்ற புதிய துப்பாக்கி உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் அறிமுக விழா தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது. அப்போது, அதன் பொது மேலாளர் சஞ்சய் திவேதி, திருச்சி கார்பைன் துப்பாக்கியை அறிமுகப்படுத்தினார். இந்தப் புதிய ரகத் துப்பாக்கி படைக்கலன் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டது.

இந்தத் துப்பாக்கியின் சிறப்புகளைக் குறித்துப் பேசியவர்கள், ``இந்தப் புதிய ரகத் துப்பாக்கி 3.1 கிலோ எடைகொண்ட. 7.6x39 மில்லிமீட்டர் அளவுகொண்டதாக, காவல்துறை, விமான நிலைய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

`தலைதூக்கும் நாட்டுத் துப்பாக்கி கலாசாரம்!' - போலீஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த அடுத்தடுத்த வழக்குகள்
புதிய ரக துப்பாக்கி
புதிய ரக துப்பாக்கி

மற்ற துப்பாக்கிகளுடன் ஒப்பிடும்போது இது சக்தி வாய்ந்த தனிப்பட்ட தானியங்கி ஆயுதமாகச் செயல்படும். துப்பாக்கிச் சூட்டின்போது சத்தத்தையும் வெளிச்சத்தையும் குறைத்து நீண்ட தூரமுள்ள இலக்கை நோக்கித் தாக்கும் திறன்கொண்டது. இந்த ரகத் துப்பாக்கியைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தங்களது பாதுகாப்பு கவச உடையில் மறைத்து வைத்துப் பயன்படுத்தும் அளவுக்கு சிறியதாக இருக்கும். அதேபோல் அசால்ட் ரைபிள் மற்றும் ஏ.கே-47-ன் உதிரி பாகங்களை இதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதுதான் கூடுதல் சிறப்பு" என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு