Published:Updated:

விதிமீறல் குவாரியின் உரிமத்தை ரத்து செய்க! வலுக்கும் திருப்பூர் விவசாயிகள் போராட்டம்...

விவசாயி போராட்டம்

திருப்பூர் மாவட்டம் கோடாங்கிபாளையம் பகுதியில் இயங்கி வரும் விதிமீறல் குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்த்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விதிமீறல் குவாரியின் உரிமத்தை ரத்து செய்க! வலுக்கும் திருப்பூர் விவசாயிகள் போராட்டம்...

திருப்பூர் மாவட்டம் கோடாங்கிபாளையம் பகுதியில் இயங்கி வரும் விதிமீறல் குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்த்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Published:Updated:
விவசாயி போராட்டம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், கோடாங்கிபாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் குவாரி நிறுவனம் முறைகேடாக இயங்கி வருவதாக புகார் எழுந்தது. இதனால் சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுவதாக அந்தப் பகுதி விவசாயிகளும் பொது மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த நிறுவனத்துக்கு சட்டத்துக்கு முரணாக வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்யக் கோரி விவசாயி செந்தில்குமார் இன்று 12 வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

விவசாயி போராட்டம்
விவசாயி போராட்டம்

இதே கோரிக்கையை வலியுறுத்தி, அவரின் மனைவி உள்ளிட்ட 10 பெண்கள் கடந்த 3 நாள்களாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு விவசாய அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  அதிகாரிகளுடனான பேச்சுவார்தையில் பெரிதாக முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞரும், விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளருமான ஈசன் கூறுகையில், ``அந்தக் குவாரியில் இருந்து 150 மீட்டரில் வீடு, தொழிற்சாலைகள் மற்றும் 250 மீட்டரில் அரசின் தொகுப்பு வீடுகள் உள்ளன.

போலி ஆவணங்கள் தயாரித்து, ஓடையை ஆக்கிரமித்தும் முறைகேடாக அனுமதி பெற்று குவாரியை இயக்கி வருகின்றனர். விதிகளை மீறி இயக்கி வருவதால் அருகில் உள்ள விவசாயிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சட்டவிரோதமாக ஆழ்குழாய்க் கிணறு அமைக்கும் இயந்திரத்தை வைத்து, குழி ஏற்படுத்தி வெடி வைத்ததை ஆதாரத்துடன் புகைப்படம் எடுத்து அனுப்பினோம்.

சாலை மறியல்
சாலை மறியல்

அப்போதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்தக் குவாரிக்கான அனுமதியை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்” என்றார் உறுதியான குரலில்.