திருப்பூர் மாவட்டம், அவிநாசி சேவூர் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன். விவசாயியான இவரின் தோட்டத்தில் மாறன் என்பவர் பணியாற்றிவருகிறார். தோட்டத்தில் சோளப்பயிர் அறுத்துக்கொண்டிருந்தபோது, திடீரென்று பாய்ந்து வந்த ஒரு சிறுத்தை மாயனைத் தாக்கியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதில், அவரின் வாய், தாடை உள்ளிட்ட பகுதிகள் பலத்த காயமடைந்தன. தகவலறிந்து தோட்டத்துக்குச் சென்ற வரதராஜனையும் சிறுத்தை தாக்கியது.
அடுத்தடுத்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம், மோகன்ராஜ் என்ற இருவரையும் சிறுத்தை தாக்கியது. இதனால் இந்தப் பகுதியில் கடுமையான பதற்றம் நிலவியது. வனத்துறையினரும் தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

சோளக்காடு என்பதால் சிறுத்தையை டிரோன் கேமரா மூலம் தேடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை, மணிகண்டன் என்கிற வேட்டைத் தடுப்பு காவலரையும் தாக்கியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அந்த சிறுத்தையைப் பிடிக்க இரண்டு கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. ``சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திலிருந்து சுமார் 25 கி.மீ பயணித்து, சேவூர் பகுதிக்கு அந்தச் சிறுத்தை வந்திருக்கிறது. சிறுத்தை மிகவும் மூர்க்கத்தனமாக இருக்கிறது. மனிதர்களையும் தாக்குவதால் அதைப் பிடிக்கும் பணியில் கும்கி யானைகள் ஈடுபடுத்தப்படவிருக்கின்றன”

என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம், கோவை குனியமுத்தூர் பகுதியில் ஒரு சிறுத்தை பிடிபட்ட நிலையில், அடுத்த சிறுத்தை வெளியில் வந்திருப்பது உள்ளூர் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.