Published:Updated:

திருப்பூர்: பாஜக-ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வீடுகளில் தாக்குதல்; எஸ்.டி.பி.ஐ, பி.எஃப்.ஐ, அமைப்பினர் கைது!

கைது

திருப்பூரில் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் வீடுகளில் தாக்குதல் நடத்திய எஸ்.டி.பி.ஐ., பி.எஃப்.ஐ அமைப்பைச் சேர்ந்த நான்கு பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

திருப்பூர்: பாஜக-ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வீடுகளில் தாக்குதல்; எஸ்.டி.பி.ஐ, பி.எஃப்.ஐ, அமைப்பினர் கைது!

திருப்பூரில் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் வீடுகளில் தாக்குதல் நடத்திய எஸ்.டி.பி.ஐ., பி.எஃப்.ஐ அமைப்பைச் சேர்ந்த நான்கு பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
கைது

திருப்பூர், காங்கேயம் சாலை ஜெய் நகர் 5-வது வீதியைச் சேர்ந்தவர் பிரபு (36). இவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உடற்பயிற்சி பிரிவு மாநிலச் செயலாளராக இருக்கிறார். கடந்த செப்டம்பர் 23-ம் தேதி இவரது வீடு, கார்மீது கற்களை வீசி மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக பிரபு அளித்த புகாரின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை
விசாரணை

விசாரணையில், இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் தடைசெய்யப்பட்ட பி.எஃப்.ஐ அமைப்பைச் சேர்ந்த கோவை, கரும்புக்கடைப் பகுதியைச் சேர்ந்த சம்சுதீன் (34), கோவை, குனியமுத்தூரைச் சேர்ந்த எஸ்.டி.பி.ஐ நிர்வாகி நிஜாமுதீன் (41) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைதுசெய்த போலீஸார், தலைமறைவாக இருக்கும் மேலும் இருவரைத் தேடிவருகின்றனர்.

பெட்ரோல் குண்டு
பெட்ரோல் குண்டு

அதேபோல, பா.ஜ.க கோவை பெருங்கோட்டப் பொறுப்பாளராக இருப்பவர் பாலகுமார் (43). இவர் திருப்பூர், அங்கேரிபாளையம் அருகே ஏ.வி.பி லே-அவுட்டில் வசித்துவந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வேறு பகுதிக்குக் குடிபெயர்ந்தார். இவர் வசித்த வீட்டில், செப்டம்பர் 25-ம் தேதி மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர்.

இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த அனுப்பர்பாளையம் போலீஸார், எஸ்.டி.பி.ஐ கட்சியின் திருப்பூர் வடக்குத் தொகுதி செய்தித் தொடர்பாளர், பாண்டியன் நகரைச் சேர்ந்த சையது இப்ராஹிம் (20), அண்ணா நகர் மேற்குப் பகுதியைச் சேர்ந்த எஸ்.டி.பி.ஐ நிர்வாகி ஃபெரோஸ்கான் (32) ஆகியோரைக் கைதுசெய்தனர்.