Published:Updated:

பராமரிப்பு இல்லாத கோழிப்பண்ணைகள்... பரவும் சுகாதார சீர்கேடு... அச்சத்தில் திருப்பூர் மக்கள்!

கோழிப்பண்ணை ( கோப்புப் படம் )

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கோழிப்பண்ணைகளை முறையாக பராமரிக்காத காரணத்தால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதிகாரிகள் உடனடியாக விதிமீறலில் ஈடுபடும் கோழிப்பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

பராமரிப்பு இல்லாத கோழிப்பண்ணைகள்... பரவும் சுகாதார சீர்கேடு... அச்சத்தில் திருப்பூர் மக்கள்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கோழிப்பண்ணைகளை முறையாக பராமரிக்காத காரணத்தால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதிகாரிகள் உடனடியாக விதிமீறலில் ஈடுபடும் கோழிப்பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Published:Updated:
கோழிப்பண்ணை ( கோப்புப் படம் )

திருப்பூர் மாநகரம் டாலர் சிட்டி என்றால், புறநகர் பகுதிகளில் ஏராளமான தொழில்கள் வளர்ந்து வருகின்றன. அந்த வகையில் தாராபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளான சின்னப்புத்தூர், கோவிந்தாபுரம், கெத்தல்ரேவ், தும்பநாயக்கன்பாளையம்,

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம்
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம்
கோப்புப் படம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காளிபாளையம் கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக ஏராளமான கோழிப் பண்ணைகள் வந்துவிட்டன. ஆனால், அவற்றை முறையாகப் பராமரிப்பது இல்லை என்று தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதில் இருந்து நாள்தோறும் கிளம்பும் ஈ தொல்லையால் சுகாதாரம் உள்ளிட்ட ஏராளமான பிரச்னைகளை அந்தப் பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து அந்தப் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ``மத்திய அரசு வழிகாட்டுதல்படி கோழிப்பண்ணை அமைக்க வேண்டும் என்றால் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து 500 மீட்டர்,

கோழிப்பண்ணை
கோழிப்பண்ணை
கோப்புப் படம்

நீர்நிலை, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 100 மீட்டர் இடைவெளி விட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், இங்கு அவை எதுவுமே பின்பற்றப்படுவதில்லை” என்றனர்.

அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், ``சுகாதாரக் குறைபாட்டால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பிரச்னைகளை சந்திக்கிறோம். நிம்மதியாக தூங்கவோ, சாப்பிடவோ கூட முடிவதில்லை. பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.

கோழிப்பண்ணை
கோழிப்பண்ணை
கோப்புப் படம்

அதிகாரிகள் உடனடியாக விதிமீறலில் ஈடுபடும் கோழிப்பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ``ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கிறோம்” என்பதோடு முடித்துக்கொண்டனர்.