Published:Updated:

``பிரதமர் மோடி என் இளநீர் கடைக்கு வந்த மாதிரி ஒரு சந்தோஷம்!" - நெகிழும் உடுமலை தாயம்மாள்

தாயம்மாள்

பிரதமர் மோடி நேற்று ஒலிபரப்பான `மன் கி பாத்' நிகழ்ச்சியில், தாயம்மாள் அவர்களின் செயலைப் பாராட்டி புகழ்ந்து பேசினார். அவர் பேசுகையில், ``தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வசிக்கும் தாயம்மாளின் செயல் மிகவும் ஊக்கம் அளிக்கிறது." என்றார்.

``பிரதமர் மோடி என் இளநீர் கடைக்கு வந்த மாதிரி ஒரு சந்தோஷம்!" - நெகிழும் உடுமலை தாயம்மாள்

பிரதமர் மோடி நேற்று ஒலிபரப்பான `மன் கி பாத்' நிகழ்ச்சியில், தாயம்மாள் அவர்களின் செயலைப் பாராட்டி புகழ்ந்து பேசினார். அவர் பேசுகையில், ``தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வசிக்கும் தாயம்மாளின் செயல் மிகவும் ஊக்கம் அளிக்கிறது." என்றார்.

Published:Updated:
தாயம்மாள்

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகிலுள்ள சின்னவீரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தாயம்மாள் (45). சின்னவீரம்பட்டியில் சாலையோரமாக கடை போட்டு இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். கணவர் ஆறுமுகம் (எ) அய்யாவு ஒரு சாதாரண கூலித் தொழிலாளி. வறுமையான குடும்பப் பின்னணிதான். இருந்தபோதிலும் தன் குழந்தைகள் படித்து வரும் சின்னவீரம்பட்டி நடுநிலைப் பள்ளியின் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்காக, இளநீர் விற்று சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்த ஒரு லட்ச ரூபாயை பள்ளியின் தலைமையாசிரியர் இன்பக்கனியிடம் தாயம்மாள் நன்கொடையாகக் கொடுத்தார்.

தாயம்மாள்
தாயம்மாள்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வெளியாக, பலரும் தாயம்மாளின் செயலைப் பாராட்டி புகழ்ந்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தாயம்மாள் குடும்பத்தினரை நேரில் வரவழைத்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று ஒலிபரப்பான `மன் கி பாத்' நிகழ்ச்சியில், தாயம்மாள் அவர்களின் செயலைப் பாராட்டி புகழ்ந்து பேசினார். அவர் பேசுகையில், ``தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வசிக்கும் தாயம்மாளின் செயல் மிகவும் ஊக்கம் அளிக்கிறது. அவருக்கு சொந்தமாக நிலம் எதுவும் இல்லை. இவர்களது குடும்பம் பல ஆண்டுகளாக இளநீர் விற்பனை செய்து வாழ்ந்து வருகிறார்கள். பொருளாதார நிலை அவருக்கு நன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் தாயம்மாள் தன் மகன் மற்றும் மகளுக்கு கல்வி கற்பதற்கு எந்த தடைக்கல்லையும் ஏற்படுத்தவில்லை.

தாயம்மாளின் குழந்தைகள் சீன்னவீரம்பட்டி பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள். அந்தப் பள்ளியில் பெற்றோர்கள் கூட்டம் நடந்தபோது, வகுப்பறைகள் மற்றும் பள்ளியின் நிலையை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. பள்ளியின் உள்கட்டமைப்புகளை சரிசெய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தப் பணிக்கான பணப் பற்றாக்குறை குறித்தும் விவாதிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் தாயம்மாளும் பங்கேற்றிருந்தார்.

இந்நிலையில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில், இளநீர் விற்று ஓரளவுக்கு சம்பாதித்த பணம் ஒரு லட்சம் ரூபாயை, தாயம்மாள் பள்ளிக் கட்டமைப்புக்காக நன்கொடை அளித்தார். உண்மையில் இதை செய்வதற்கு ஒரு பெரிய மனதும், சேவை உணர்வும் வேண்டும். தற்போது அந்தப் பள்ளியில் 8-ம் வகுப்புவரை இருக்கிறது. பள்ளியின் உள் கட்டமைப்பு மேம்பட்டால் மேல்நிலை கல்வி வரை வகுப்புகள் நடைபெறும்" எனப் பேசினார்.

மிகுந்த நெகிழ்ச்சியில் இருந்த தாயம்மாளிடம் பேசினோம். ``எனக்குப் பெருசா படிப்பு இல்லைங்க. நாலாவதுதான் படிச்சிருக்கேன். என் வீட்டுக்காரர் ஏழாவது வரைக்கும்தான் படிச்சிருக்காங்க. என் வீட்டுக்காரர் படிச்ச அதே ஸ்கூல்லதான் என் பசங்களும் படிக்கிறாங்க. பேரன்ட்ஸ் மீட்டிங்ல ஸ்கூல்ல போதுமான வசதி இல்லைன்னு சொன்னாங்க. `நாமதான் பெருசா படிக்கல. வருங்காலத்துல வர்ற குழந்தைகளாவது நல்லா படிக்கட்டும்னு, சேர்த்து வச்சிருந்த ஒரு லட்ச ரூபாயை ஸ்கூலுக்கு டொனேசனா கொடுத்தோம். ஏதோ நம்ம மனசு திருப்திக்கு கொடுக்குறோம்னுதான் நினைச்சி கொடுத்தோம். ஆனா, இந்த விஷயம் இவ்ளோ பெருசா வெளியே தெரியும், எல்லாரும் பாராட்டுவாங்கன்னு எனக்குத் தெரியாது. அதுவும் பிரதமர் மோடி என்னைப் பாராட்டி பேசுனது, நான் இளநீர் வியாபாரம் செஞ்சப்ப பக்கத்துல அவர் வந்து நின்னு ஊக்கப்படுத்துன மாதிரி சந்தோஷமா இருந்துச்சி. இதையெல்லாம் நான் நினைச்சுக் கூட பார்க்கலை.

எனக்குத் தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்க எல்லாம் நல்ல விஷயம் செஞ்சிருக்கன்னு பாராட்டுறாங்க. மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. சின்னவீரம்பட்டி ஸ்கூல்ல இப்போ 650 குழந்தைங்க படிக்கிறாங்க. ஸ்கூல்ல விளையாட இட வசதி, கட்டட வசதி யாராச்சும் செஞ்சு கொடுத்தா உதவியா இருக்கும்" என்றார்.