Published:Updated:

திருப்பூர்: ``சிறுவர்கள் உயிரிழப்புக்குக் காரணமான காப்பகத்துக்கு சீல்!" - அமைச்சர் கீதா ஜீவன் தகவல்

திருப்பூர் - காப்பகம்

திருப்பூரில் 3 சிறுவர்கள் உயிரிழப்புக்குக் காரணமான காப்பகம் மூடப்படுவதுடன், காகப்பக நிர்வாகிமீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன தெரிவித்தார்.

திருப்பூர்: ``சிறுவர்கள் உயிரிழப்புக்குக் காரணமான காப்பகத்துக்கு சீல்!" - அமைச்சர் கீதா ஜீவன் தகவல்

திருப்பூரில் 3 சிறுவர்கள் உயிரிழப்புக்குக் காரணமான காப்பகம் மூடப்படுவதுடன், காகப்பக நிர்வாகிமீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன தெரிவித்தார்.

Published:Updated:
திருப்பூர் - காப்பகம்

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி ஸ்ரீ விவேகானந்தா சேவாலயத்தில் ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை உட்கொண்ட 3 சிறுவர்கள் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 11 மாணவர்கள் மற்றும் காவலாளி ஒருவர் என 12 பேர், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாவது நாளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், காப்பகத்தை செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர். தொடர்ந்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

காப்பகம்
காப்பகம்

இதையடுத்து, சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``ஸ்ரீ விவேகானந்தா சேவாலயத்தில் ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்திலிருந்த 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

எஞ்சிய 11 மாணவர்களும் வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் வயிற்றுவலி பிரச்னைகளில் அவதிப்பட்ட நிலையில், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமைச்சர்கள்
அமைச்சர்கள்

பொதுப்பணித்துறை செயலர் மணிவாசன் தலைமையில் விசாரணைக்குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதில் சமூக நலத்துறை இயக்குநர் வளர்மதி உள்ளிட்டோர் உள்ளனர். தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

குழந்தைகள் தங்கியிருந்த மற்றும் இறந்த இடத்தையும் பார்வையிட்டோம். 100 மீட்டர் தாண்டித்தான் கழிவறை இருந்துள்ளது. இதனால் குழந்தைகள் இரவுநேரங்களில் இயற்கை உபாதைக்குகூட வழியின்றி மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். அதேபோல் அங்கு உரிய காப்பாளர் யாரும் இல்லை.

காப்பகம்
காப்பகம்

தாய், தந்தை இல்லாத குழந்தைகள் விஷயத்தில் உரிய கவனம் எடுக்காமல் அஜாக்கிரதையோடு, மெத்தனப்போக்குடன் இருந்ததால்தான் இப்படியொரு துயரச்சம்பவம் நடந்துள்ளது. இது கண்கூடாகத் தெரிகிறது.

3 பேர் உயிரிழந்த நிலையில், சிறுவர்கள் தங்கியிருந்த இடத்தை மெத்தனப்போக்காக கையாண்டதால் ஸ்ரீ விவேகானந்தா சேவாலயம் மூடப்படுகிறது. இந்த சிறுவர்கள் அனைவரும் ஈரோட்டில் உள்ள அரசு காப்பத்துக்கு, சிகிச்சை முடிந்ததும் மாற்றப்படுவார்கள். இவர்கள் அரசின் பராமரிப்பில் இருப்பார்கள்.

போலீஸ்
போலீஸ்
Photo: Vikatan

காப்பக நிர்வாகிமீது அரசு சட்டப்படி, குற்றநடவடிக்கை எடுக்கப்படும். பணியை சரியாக செய்யாத மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரஞ்சிதபிரியாமீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.