Published:Updated:

திருப்பூர்: சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம்; குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் பணியிடை நீக்கம்!

திருப்பூர்

சிறுவர்கள் தங்கியிருந்த தனியார் காப்பகம் மூடப்பட்டதுடன், பணியில் மெத்தனமாகச் செயல்பட்ட திருப்பூர் மாவட்டக் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதபிரியா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியிலுள்ள ஸ்ரீவிவேகானந்தா சேவாலயத்தில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை உட்கொண்ட 14 சிறுவர்களில் மூன்று பேர் அண்மையில் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்ட சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், சிறுவர்கள் தங்கியிருந்த காப்பகம் மூடப்படுவதுடன், மெத்தனப்போக்குடன் செயல்பட்ட மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரஞ்சிதபிரியா மீது, துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

சிறுவர்கள் மரணம்
சிறுவர்கள் மரணம்

இந்த நிலையில், மாவட்டக் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதபிரியா பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக சமூகநலப் பாதுகாப்புத்துறையின் நன்னடத்தை அலுவலர் து.நித்யா நியமிக்கப்பட்டிருக்கிறார்.