Published:Updated:

`என்னை எப்படியாவது கொண்டுபோய் சேர்த்துவிடுங்கள்'- வழிதவறிய முதியவரை காப்பாற்றிய திருப்பூர் கலெக்டர்

``தான் மரணித்தாலும் தன்னுடைய மண்ணில் மரணிப்பதுதான் மகிழ்ச்சி. என்னை எப்படியாவது எங்கள் ஊரில் கொண்டுபோய் சேர்த்துவிடுங்கள்.

முதியவர் கோபால்
முதியவர் கோபால்

`இந்தப் படத்தில் இருக்கும் முதியவர் கோபால். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா, புடுவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தான் வழிமாறி வந்துவிட்டதாகவும் சொல்கிறார். பெரியவருக்கு காது சரியாகக் கேட்கவில்லை. தற்போது அந்தப் பெரியவரை எங்கள் பகுதி இளைஞர்கள் சேர்ந்து பாதுகாப்பு கொடுத்து வைத்திருக்கிறோம். இதைப்பற்றி பொன்னேரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கும் கும்மிடிப்பூண்டி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கும் தகவல் கொடுத்துள்ளோம்.

கோபால்
கோபால்

எனவே, இந்தப் பெரியவரை அவரின் உறவினர்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்' என்று ஒரு முதியவரின் படத்தைப் பதிவிட்டு திருப்பூர் கலெக்டருக்கு ட்விட்டரில் ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்தக் கோரிக்கை குறித்து 24 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல் கிடைக்க ட்விட்டரில் கலெக்டரிடம் கோரிக்கை வைத்த மதிவாணன், மதன்குமார் என்பவர்களிடம் பேசினோம்.

`பொறுமையை இழந்துட்டேன்;திங்கள்கிழமை என் யுத்தம் ஸ்டார்ட்!'-அதிகாரிகளை தெறிக்கவிடும் தி.மலை கலெக்டர்

அதில், ``அந்த முதியவர் பெயர் கோபால். 75 வயதாகும் இவர் சமீபத்தில் பழனிக்கு வந்திருக்கிறார். அங்கு வந்தவர் தாராபுரத்தை அடுத்துள்ள எங்களின் கிராமமான செலம்பாளையத்துக்கு வழிதவறி வந்திருக்கிறார். அங்கு அழுதுகொண்டு நின்றிருக்க வேலைக்குச் சென்ற கிராம மக்கள் அவரை அழைத்து ஊர் கோயிலில் விட்டுவிட்டனர். இந்த விஷயம் அறிந்து எங்கள் பசங்களுடன் சென்று அவரைப் பார்த்தோம். விசாரித்ததில் அவர் பெயர் உள்ளிட்ட விவரங்களை தெரிவித்தவர், ``தான் மரணித்தாலும் தன்னுடைய மண்ணில் மரணிப்பதுதான் மகிழ்ச்சி. என்னை எப்படியாவது எங்கள் ஊரில் கொண்டுபோய் சேர்த்துவிடுங்கள்" என அழுதுகொண்டே கூறினார்.

கிராம நிர்வாக அலுவலருடன் முதியவர் கோபால்
கிராம நிர்வாக அலுவலருடன் முதியவர் கோபால்

முதியவரின் அழுகையும் அவர் சொன்ன வார்த்தைகளும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தன. அவரை முதியோர் காப்பகத்தில் விடுவதைவிட உறவினர்களிடம் சேர்ப்பதே அவருக்கு செய்யும் உதவியாக இருக்கும் என எண்ணி நாங்கள் அனைவரும் ட்விட்டர் மூலம் எங்களின் மாவட்ட கலெக்டருக்கு தெரியப்படுத்தினோம்.

` உங்களுக்காகவே நான் எழுதுகிறேன்!' - அரசுப் பள்ளி மாணவியை நெகிழ வைத்த திருப்பூர் கலெக்டர்

இதை அறிந்த கலெக்டர் உடனே வருவாய்த்துறை அதிகாரிகளை அனுப்பினார். அவர்கள் முதியவரை விசாரித்த பின்னர் எங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலர் மூலம் முதியவரை அவரின் உறவினர்களுடன் சேர்த்துவிட கலெக்டர் ஆணை பிறப்பித்துள்ளார். இப்போது அந்த முதியவர் அவரது பகுதிக்குச் சென்றுகொண்டிருக்கிறார்.

கலெக்டர்
கலெக்டர்

அவரை உரிய இடத்தில் ஒப்படைந்ததால் எங்களுக்கு மகிழ்ச்சி. தகுந்த நேரத்தில் உத்தரவிட்ட ஆட்சியருக்கும் உடனடியாக விரைந்துவந்த அதிகாரிகளுக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறோம்" எனக் கூறியுள்ளனர். அவர்கள் கூறியபடியே தற்போது அந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலர் முதியவரை அழைத்துக்கொண்டு திருவள்ளூருக்கு சென்றுகொண்டிருக்கிறார்.

`9 மாதங்கள்; 90 ஆக்கிரமிப்புகள் அகற்றம்!' - ஆளும்கட்சியைப் பதறவைத்த கேரள பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி