Election bannerElection banner
Published:Updated:

சாலை பாதுகாப்பில் சிறந்து விளங்கும் திருவள்ளூர் மாவட்டம்... விருது வழங்கி கெளரவித்த முதல்வர்!

விருதைப் பெற்றுக்கொள்ளும் ஆட்சியர் பொன்னையா
விருதைப் பெற்றுக்கொள்ளும் ஆட்சியர் பொன்னையா

திருவள்ளூர் மாவட்டம் தேசியளவில் சாலை பாதுகாப்பில் சிறந்து விளங்கியதற்காகத் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சாலை பாதுகாப்பு விருது மற்றும் காசோலையை வழங்கி கௌரவித்தனர்.

சென்னையில் நேற்று முன்தினம் தனியார் விடுதி ஒன்றில் தமிழக அரசின் சாலை பாதுகாப்பு திட்டங்கள் அர்ப்பணிப்பு விழா மற்றும் சிறந்த சாலை பாதுகாப்பு நடைமுறைகள் விழிப்புணர்வு விழா நடைபெற்றது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார்.

விருது நிகழ்ச்சி
விருது நிகழ்ச்சி

விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் முதல்வர் பழனிசாமி ஆகியோர் அக்கரை முதல் மாமல்லபுரம் வரை, 8.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வேகக் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் நவீன போக்குவரத்து மேலாண்மை அமைப்பை நாட்டுக்கு அர்ப்பணித்தனர்.

அதைத் தொடர்ந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ரூ.4.77 கோடி மதிப்பீட்டில் சாலை பாதுகாப்பு ரோந்து வாகனங்கள் மற்றும் சாதனங்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். தேசிய அளவில் சாலை பாதுகாப்பில் சிறந்து விளங்கிய மாவட்டங்களாக சேலம், தஞ்சாவூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை அறிவித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

கடத்தப்பட்ட பள்ளி மாணவன்; குடும்பப் பிரச்னையில் அக்கா கணவரே ஆள்வைத்துக் கடத்தியது அம்பலம்!

இந்த விழாவில் திருவள்ளூர் மாவட்டம் தேசிய அளவில் சாலை பாதுகாப்பில் சிறந்து விளங்கியதற்காகத் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னய்யாவுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சாலை பாதுகாப்பு விருது மற்றும் காசோலையை வழங்கி கௌரவித்தனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு