Published:Updated:

`கொரோனா ஊரடங்கு காலம் வரை வீட்டு வாடகை வசூலிக்க வேண்டாம்!’ –தி.மலை ஆட்சியர் வேண்டுகோள்

திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி.
திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி. ( கா.முரளி )

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலம் உள்ளவரை வீட்டு உரிமையாளர்கள் வாடகை வசூலிக்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவண்ணாமலையில் மாவட்ட நிர்வாகம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருவதோடு, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர டோக்கன்கள் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகள் சீல் வைக்கப்பட்டு, தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ஊரடங்கு காலம் முடியும் வரையில் வீட்டு வாடகை வசூலிக்க வேண்டாம் என திருவண்ணாமலை ஆட்சியர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,``திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவாமல் தடுக்க கடந்த 24.03.2020 மாலை 8 மணி முதல் 144-ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஊரடங்கு காலத்தில் அனைத்துத் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள் உட்பட அனைத்து நிறுவனங்களும் முற்றிலும் மூடப்பட்டு பணியாளர்கள் அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

`கொரோனா ஊரடங்கு காலம் வரை வீட்டு வாடகை வசூலிக்க வேண்டாம்!’ –தி.மலை ஆட்சியர் வேண்டுகோள்

இதனால் கட்டுமானப் பணியாளர்கள், தினக்கூலிகள், குறைந்தளவு மாதச் சம்பளம் வாங்குபவர்கள் உட்பட அனைவரும் வீட்டில் இருக்கும் நிலை உருவாகி உள்ளது. மக்களின் பாதுகாப்புக்கு நலன் கருதி அரசு சார்பாக அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 உதவித் தொகை மற்றும் அரிசி, பருப்பு ஆகிய நிவாரணப் பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

'ஏப்ரல் 30 வரை ஊரடங்கு, அனைத்து கட்டுப்பாடுகளும் தொடரும்!’ -முதல்வர் அறிவிப்பில் என்னென்ன சலுகைகள்?!

இந்த இக்கட்டான சூழ்நிலையில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியிருப்பார்கள் என்று தெளிவாக உணரமுடிகிறது. இந்தச் சூழ்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் ஊரடங்கு உத்தரவு காலம் முடியும் வரை தங்கள் வீடுகளில் வசிப்பவர்களிடம் மாத வாடகையை வசூலிக்க வேண்டாம் என அன்போடு வேண்டுகோள் விடுகிறேன்” என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு