Published:Updated:

மறுமணம்: ``கல்யாணம் பண்ணிவெப்பியா, மாட்டியா?’’ - ஆத்திரத்தில் தந்தையைக் கொலைசெய்த இளைஞர்

கொலை

மறுமணம் செய்துவைக்க தாமதப்படுத்திய தந்தையைக் கொடூரமாக வெட்டிச் சாய்த்திருக்கிறார் இளைஞர் ஒருவர்.

மறுமணம்: ``கல்யாணம் பண்ணிவெப்பியா, மாட்டியா?’’ - ஆத்திரத்தில் தந்தையைக் கொலைசெய்த இளைஞர்

மறுமணம் செய்துவைக்க தாமதப்படுத்திய தந்தையைக் கொடூரமாக வெட்டிச் சாய்த்திருக்கிறார் இளைஞர் ஒருவர்.

Published:Updated:
கொலை

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்த மோத்தக்கல் ஊராட்சிக்குட்பட்ட குபேரப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் சகாதேவன், வயது 59. இவர் மனைவி அன்னக்கிளி. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்களும் மணிகண்டன், சக்திவேல் என்ற இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். மகள்கள் இருவரும் திருமணமாகி, கணவர்களுடன் வசித்துவருகிறார்கள். சகாதேவன் தன் இரண்டு மகன்களுடன் பன்றிக்கறி வியாபாரம் செய்துவந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு மூத்த மகனுக்குத் திருமணம் செய்துவைத்த அவர், 2019 கொரோனா காலகட்டத்தில் இளைய மகன் சக்திவேலுக்கும் பெண் பார்த்து மணமுடித்தார். திருமணமான ஒரு மாதத்திலேயே சக்திவேலுவுடன் வாழப் பிடிக்காமல் அந்தப் பெண் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். பின்னர், விவாகரத்தும் பெற்றுவிட்டனர். இதனால், தனக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கும்படி தந்தையை வற்புறுத்திவந்திருக்கிறார் சக்திவேல்.

கைது
கைது

மறுமணம் என்பதால் பெண் கிடைப்பதில் தாமதமாகியிருக்கிறது. இதனால், பெற்றோர்மீது அவர் கோபப்பட்டிருக்கிறார். ‘கல்யாணம் பண்ணிவெப்பியா, மாட்டியா..?’ எனக் கேட்டு நேற்று மாலையும் தந்தையிடம் தகராறு செய்திருக்கிறார். வாக்குவாதம் முற்றவே, பெற்றோர் என்றும் பார்க்காமல் சக்திவேல் சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். மோதல் மூண்டதால், தந்தையை வெட்டிச் சாய்த்தார். தகவலறிந்து வந்த தானிப்பாடி போலீஸார், சகாதேவனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்கு பதிவுசெய்து சக்திவேலுவைக் கைதுசெய்தனர். தந்தை கொலையில் மூத்த மகன் மணிகண்டனுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில், அவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம், அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.