Published:Updated:

`கொரோனா வார்டுக்கு படுக்கைகள்; நகராட்சிக்கு சானிட்டரி பொருள்கள்!’ -திருவாரூரை கலக்கும் தொழிலதிபர்

கொரோனா நிவாரண உதவி
கொரோனா நிவாரண உதவி

`நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் பரிந்துரைப்படி நாடோடி இனத்தவருக்கு 1,000 கிலோ அரிசியை வழங்கினேன். இன்னும் என்னால் இயன்றதைச் செய்வதற்குத் தயாராக இருக்கிறேன்" - தொழிலதிபர்

கொரோனா சிறப்பு வார்டுக்கான கட்டில்கள், மெத்தைகள், தலையணைகள், கொரோனா தடுப்புக்கு நகராட்சிக்குத் தேவையான உபகரணங்கள், வறுமையில் வாடுவோருக்குப் பண உதவி என அசத்தி வருகிறார் திருவாரூர் நிதி நிறுவன அதிபர் கார்த்திகேயன்.

கார்த்திகேயன்
கார்த்திகேயன்

திருவாரூர் கமலாலயம் வடகரையில் கடந்த 2012 -ம் ஆண்டு `ஸ்ரீ நாராயணி நிதி லிமிடெட்' என்ற நிறுவனத்தைத் தொடங்கிய கார்த்திகேயன் 8 ஆண்டுகளில் இன்று தமிழகம் முழுவதும் 22 கிளைகளை பரப்பி இருக்கிறார். அத்துடன் இதன் சார்பு நிறுவனமாக கும்பகோணத்தில் ஸ்ரீ நாராயணி கும்பகோணம் நிதி லிமிடெட் என்பதையும் அமைத்திருக்கிறார்.

சிறுவயதில் தான் படித்த கும்பகோணம் அருகே உள்ள திப்பிராஜபுரம் பள்ளிக்கு சுமார் 1 கோடி ரூபாய் செலவில் இலவசமாக கட்டடங்களைக் கட்டித் தந்துள்ளார். இவர் தற்போது கொரோனா பாதிப்புக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறார்.

`நாடு முழுவதும் ஊரடங்கு!’ - மேலும் இரு வாரங்களுக்கு நீட்டித்தது மத்திய அரசு #NowAtVikatan

கார்த்திகேயனிடம் பேசினோம், ``ஊரடங்கு நேரத்தில் கொரோனா தொற்று பரவாமல் நகரைத் தூய்மைப்படுத்தும் திருவாரூர் முனிசிபாலிட்டிக்கு சுமார் 5 லட்சம் மதிப்பிலான பிளீச்சிங் பவுடர், முகமூடிகள், கையுறைகள், சானிட்டரி பொருள்கள் ஆகியவற்றை வழங்கினேன். இது நகர மக்களைப் பாதுகாக்க உதவும். அடுத்ததாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீரென கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டன. உடனடி வசதிகள் அங்கில்லை. நோயாளிகள் நிறைய பேர் வந்து சேரவே, அம்மருத்துவமனைக்குத் தேவையான சுமார் 55 கட்டில்கள், மெத்தைகள், தலையணைகள் ஆகியவற்றை கலெக்டர் ஆனந்த் முன்னிலையில், கல்லூரி டீன் ஜெகநாதனிடம் வழங்கினேன்.

படுக்கைகள்
படுக்கைகள்

ஊரடங்கால் கும்பகோணத்தில் வருமானமின்றித் தவித்த 525 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் வழங்கினேன். அதேபோல் மங்கல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாமல் வருமானமின்றி வாடிய வேதவிற்பன்னர்கள் 100 பேருக்கு தலா ரூ.1,000 வழங்கினேன். நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் பரிந்துரைப்படி நாடோடி இனத்தவருக்கு 1,000 கிலோ அரிசி வழங்கினேன். இன்னும் என்னால் இயன்றதைச் செய்வதற்குத் தயாராக இருக்கிறேன். இந்தக் காரியங்களால் எனக்கு ஒரு மனநிறைவு ஏற்படுகிறது. இறைவனுக்குச் செய்யும் கைங்கர்யங்களை வெளியில் சொல்ல இயலாது. அதுபோலதான் இந்த மக்கள் சேவையையும் கருதுகிறேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு