Published:Updated:

விகடன் செய்தி எதிரொலி: சீரமைக்கப்பட்ட திருவாரூர் பேருந்து நிலையம், ஆனால்... இதையும் கவனிக்கலாமே!

திருவாரூர் புதிய பேருந்து நிலையம்

திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தின் அவலநிலை குறித்து விகடன் தளத்தில் அண்மையில் விரிவாகச் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் எதிரொலியாகத் தற்போது புதிய பேருந்து நிலையம் சீரமைக்கப்பட்டிருக்கிறது.

விகடன் செய்தி எதிரொலி: சீரமைக்கப்பட்ட திருவாரூர் பேருந்து நிலையம், ஆனால்... இதையும் கவனிக்கலாமே!

திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தின் அவலநிலை குறித்து விகடன் தளத்தில் அண்மையில் விரிவாகச் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் எதிரொலியாகத் தற்போது புதிய பேருந்து நிலையம் சீரமைக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:
திருவாரூர் புதிய பேருந்து நிலையம்

திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தின் அவலநிலை குறித்து விகடன் தளத்தில் அண்மையில் விரிவாகச் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் எதிரொலியாக, தற்போது புதிய பேருந்து நிலையம் சீரமைக்கப்பட்டிருக்கிறது.

பயன்பாட்டுக்கு வந்த தாய்மார்கள் பாலூட்டும் அறை:

திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறையின் அவலநிலையை நாம் செய்தியில் குறிப்பிட்டிருந்தோம். இந்த நிலையில், தாய்மார்கள் பாலூட்டும் அறை புதிய இடத்துக்கு மாற்றப்பட்டு, ஜன்னல் கதவுகள் சரிசெய்யப்பட்டு, மின்வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த பயணிகள் அமரும் அறை:

அதேபோல பயணிகள் அமரும் ஆண்கள், பெண்கள் அறை, முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு தரைக்கு வண்ணம் பூசப்பட்டிருக்கிறது. அறையில் உடைந்த நிலையிலிருந்த மின் பொத்தான்கள் மற்றும் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகள் மறுசீரமைக்கப்பட்டுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. மின்விசிறி மட்டும் தற்போதும் மாதிரி காட்சிப்பொருளாகவே இயக்கமின்றி இருப்பதாக பயணிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

பயணிகள் அமரும் அறை ஒவ்வொன்றிலும் ஓர் இருக்கை மட்டுமே அமைக்கப்பட்டிருப்பதால், கூடுதல் எண்ணிக்கையில் இருக்கைகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்திருக்கிறது.

புதிய இடத்தில் பயன்பாட்டுக்கு வந்த புறக்காவல் நிலையம்:

திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் அமைந்திருக்கும் புறக்காவல் நிலையம், போலீஸாரின் பார்க்கிங் ஷெட்டாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் எதிரொலியாக திருவாரூர் B1 புறக்காவல் நிலையம் புதிய இடத்துக்கு மாற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.

விகடன் செய்தி எதிரொலி: சீரமைக்கப்பட்ட திருவாரூர் பேருந்து நிலையம், ஆனால்... இதையும் கவனிக்கலாமே!

விரைவில் இந்தப் புறக்காவல் நிலையத்தில் போலீஸார் இரவு நேரப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று பயணிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

தற்காலிகமாகச் சரிசெய்யப்பட்ட பள்ளம்:

பேருந்து நிலையத்தின் நுழைவுவாயில் சாலை மிகவும் சேதமடைந்து கிடப்பதைச் சுட்டிக்காட்டியிருந்தோம். அதன் எதிரொலியாக, நுழைவுவாயில் சாலையின் பள்ளம் மண், கல் கொண்டு தற்காலிகமாகச் சரிசெய்யப்பட்டிருக்கிறது.

இது மழைக்காலம் என்பதால் மண் கொட்டப்பட்ட இடங்களிலும் தண்ணீர் தேங்கி, சாலை சகதிபோல் காட்சியளிக்கிறது. எனவே, நிரந்தரத் தீர்வாக தார்சாலை அமைக்க வேண்டுமென பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

பயன்பாட்டுக்கு வந்த குடிநீர் மற்றும் இலவச கழிப்பறை :

திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் இலவச குடிநீர் மற்றும் இலவச கழிப்பறை பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறது என்று செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், குடிநீர்க் குழாய்கள் சரிசெய்யப்பட்டிருக்கின்றன. அதேபோல இலவச கழிவறை சுத்தம் செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டிருக்கிறது.

மூடப்படுமா திறந்த கால்வாய்கள்... பயணிகளின் கோரிக்கை..!

ஆனால், மழைக்காலமாக இருந்தும் திறந்தநிலையில் கிடக்கும் கால்வாய் இன்னும் மூடப்படாமல் இருக்கிறது. இதை கவனித்து அதிகாரிகள் உடனே மூட வேண்டும் எனக் கோரிக்கைக் குரல்கள் வலுத்திருக்கின்றன.

இது குறித்து நம்மிடம் பேசிய பயணிகள், ``இரண்டு வருடங்களாக பேருந்து நிலையத்தின் பிரச்னைகளைக் கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம், விகடன் செய்தி வெளியிட்ட பிறகாவது சரிசெய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், அவசரகதியில் தார்ச்சாலை போடாமல் மண் கொட்டி மூடியது, பேருக்கு காத்திருப்பு அறையில் இரண்டு இருக்கைகளை மட்டும் போட்டிருப்பது எனச் சில விஷயங்களை முறையாகச் செய்யாதது அதிருப்தி அளிக்கிறது. மேலும், இன்னும்கூட அந்தக் கால்வாய் மூடப்படாமலேயே இருக்கிறது. இத்தனை வேலைகளைச் செய்த நிர்வாகம், இன்னும் சிலவற்றை முறையாகச் செய்திருக்கலாம்" என்றனர்.