Published:Updated:

ரெளடி பட்டியலில் இருப்பவர்கள் திருந்தி வாழ வாய்ப்பு! - கவனம் ஈர்த்த திருவாரூர் மாவட்ட காவல்துறை

திருவாரூர் காவல்துறை
News
திருவாரூர் காவல்துறை

எங்கயாவது குற்றச் சம்பவங்கள் நடந்தால், சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் அழைத்து சென்று விசாரணை மேற்கொள்வார்கள். இதுபோல் இன்னும் பல்வேறு பாதிப்புகளை இவர்கள் சந்தித்து வருகிறார்கள்.

தொடர்ச்சியான குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடியவர்களின் பெயர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள காவல்நிலையங்களின் ரௌடிகள் பட்டியலில் பதிவு செய்யப்பட்டு அவர்களை போலீஸார் தொடர் கண்காணிப்பில் வைத்திருப்பது வழக்கம். காலப்போக்கில் இவர்களில் சிலர் திருந்தினாலும் கூட, ரௌடிகள் பதிவேட்டில் அவர்கள் பெயர் தொடர்ந்து நீடித்துக் கொண்டே தான் இருக்கும். இதனால் இவர்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவார்கள்.

விஜயகுமார் ஐ.பி,.எஸ்
விஜயகுமார் ஐ.பி,.எஸ்

எங்கயாவது குற்றச் சம்பவங்கள் நடந்தால், சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் அழைத்து சென்று விசாரணை மேற்கொள்வார்கள். இதுபோல் இன்னும் பல்வேறு பாதிப்புகளை இவர்கள் சந்திப்பதோடு, இவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்படுவார்கள். இவர்களுக்காக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குரல் கொடுத்தாலும், இதைப் பற்றி காவல்துறை அதிகாரிகள் பெரும்பாலும் கண்டுகொள்ளமாட்டார்கள். இந்நிலையில் தான் திருவாரூர் காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார், இதில் கவனம் செலுத்தியிருப்பது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதுகுறித்து பேசும் திருவாரூர் காவல்துறையினர், ‘``இம்மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் ரெளடிகளுக்கு பதிவேடு துவங்கி கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதில் கடந்த சில ஆண்டுகளாக, குற்றச்செயல்களில் ஈடுபடாமலும், கெட்ட நடத்தைக்காரர்களிடம் தொடர்பில் இல்லாமலும், கடந்த 3 ஆண்டுகளாக வழக்குகள் நிலுவையில் இல்லாமலும் இருந்து வரக்கூடிய 51 போக்கிரி பதிவேடு ரெளடிகளுக்கு அவர்களின் நன்னடத்தை காரணமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் சட்டரீதியாக போக்கிரி பதிவேடு முடிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட காவல் அலுவலகம்
மாவட்ட காவல் அலுவலகம்

அத்தகைய ரெளடிகளை திருவாருர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், 24.12.21-ம் தேதி தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து அவர்களின் குடும்ப சூழ்நிலை மற்றும் நன்னடத்தை ஆகியவற்றை கருத்தில் கொண்டு திருந்தி வாழ வாய்ப்பளித்து நல்வாழ்வு வாழ அறிவுரை வழங்கினார்கள். அதேசமயம் இவர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் எனவும், இத்தகைய அரிய வாய்ப்பை மீறி யாரேனும் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு போக்கிரி பதிவேடு துவங்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தார்’’ என தெரிவித்தார்கள்.