Published:Updated:

`வாசனும் என்னைக் கைவிட்டுவிட்டார்; ஆணவம் நிறைந்த அமைச்சர்’-வேலுமணி மீது பாயும் த.மா.கா துணைத் தலைவர்

கோவை தங்கம்

``மேற்கு மண்டலம் முழுவதும் வேலுமணியின் கன்ட்ரோல். நீங்க திரு.வி.க நகர்ல நில்லுங்க அண்ணா என்று துணை முதல்வர் கூறினார்.’’ - கோவை தங்கம்

`வாசனும் என்னைக் கைவிட்டுவிட்டார்; ஆணவம் நிறைந்த அமைச்சர்’-வேலுமணி மீது பாயும் த.மா.கா துணைத் தலைவர்

``மேற்கு மண்டலம் முழுவதும் வேலுமணியின் கன்ட்ரோல். நீங்க திரு.வி.க நகர்ல நில்லுங்க அண்ணா என்று துணை முதல்வர் கூறினார்.’’ - கோவை தங்கம்

Published:Updated:
கோவை தங்கம்

சட்டசபைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. தி.மு.க., அ.தி.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அ.ம.மு.க என ஐந்து முனை போட்டி நிலவுகிறது. இதில், பிரதான தி.மு,க., அ.தி.மு.க கூட்டணியில் வேட்பாளர்கள் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாக அந்தக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். அ.தி.மு.க கூட்டணியில் அந்தப் பிரச்னை நாளுக்கு நாள் வெடித்துவருகிறது. கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியை, அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா எதிர்பார்த்திருந்தது.

அ.தி.மு.க., த.மா.கா கூட்டணி
அ.தி.மு.க., த.மா.கா கூட்டணி

``த.மா.கா துணைத் தலைவர் கோவை தங்கம் அங்கு ஏற்கெனவே எம்.எல்.ஏ-வாக, தொகுதிக்குள் நல்ல பெயருடன் இருக்கிறார். எனவே, இந்தமுறை அவர் நின்றால் வெற்றி உறுதி” என்று சொல்லி அவர் வால்பாறையில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனுவும் அளித்தனர். ஆனால், வால்பாறை தொகுதி த.மா.கா-வுக்கு ஒதுக்கப்படவில்லை. இதனால், கோவை தங்கம் அதிருப்தியில் இருக்கிறார்.

வால்பாறையில் சுயேச்சையாகப் போட்டியிடத் திட்டமிட்டுள்ள கோவை தங்கத்திடம் பேசினோம். ``வால்பாறை மக்கள் குடும்பத்தில் ஒருவராக நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். 1980-ம் ஆண்டிலேயே இந்திரா காந்தி என்னை வால்பாறை தொகுதி வேட்பாளராக நியமித்தார். 2001-ம் ஆண்டு எனக்கு மீண்டும் வாய்ப்பளித்து, வால்பாறையில் வெற்றிபெற வைத்தனர்.

கோவை தங்கம்
கோவை தங்கம்

தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.76 கூலியிலிருந்து, 4 ரூபாயை குறைத்துவிட்டனர். அப்போது வால்பாறையில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. நான் சட்டமன்றத்தில் அது குறித்துப் பேசி, அந்த உத்தரவை நீக்கவைத்தேன். அதன் பிறகும், தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்காகப் பல போராட்டங்களை நடத்தினேன்.

2006-ம் ஆண்டு மீண்டும் வால்பாறை தொகுதியில் போட்டியிட்டு வென்று, அது குறித்து சட்டசபையில் கண்ணீர்விட்டுப் பேசினேன். அப்போது, முதல்வராக இருந்த கருணாநிதி தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கான கூலியை உயர்த்தி உத்தரவிட்டார். 1997-க்கு பிறகு ஊதிய உயர்வு, பஞ்சப்படி அளிக்காமல் இருந்தனர்.

வால்பாறை
வால்பாறை

இதற்காக சட்டசபையில் சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்தேன். அதன்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு கொடுக்காவிட்டால், சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினரைக் கைதுசெய்யலாம் என்ற சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற வைத்திருக்கிறேன்.

அதன் பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் பதவியிலிருந்து விலகி, த.மா.கா-வில் இணைந்தேன். அ.தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தது. அப்போது, ``வால்பாறை தொகுதியை எனக்குக் கொடுக்காமல் இருப்பது நல்லதல்ல” என அ.தி.மு.க தொகுதிப் பங்கீடு கமிட்டியில் கூறினர். உடனே அமைச்சர் வேலுமணி அவர்களுடன் சண்டைக்குப் போய்விட்டார்.

வேலுமணி
வேலுமணி

``எங்களுக்குள்ள சண்டை மூட்டி விடறீங்களா..? அவர் ஸ்டேட் லீடர். தாராபுரம், திரு.வி.க நகர், ஶ்ரீபெரும்புதூர்னு எங்க வேணாலும் நிக்கலாம். எங்க நின்னாலும், அவரை நாம ஜெயிக்கவைக்கலாம். வால்பாறைல நிக்கணும்னு என்ன இருக்கு?” என அவர்கள் மீது பாய்ந்தார்.

அதற்கு தங்கமணி, ``தாராபுரம்தான் பி.ஜே.பி-க்கு கொடுத்துட்டமே”னு சொன்னார். அதற்கு வேலுமணி, ``இவருக்காகத்தானே தாராபுரத்தை நிறுத்திவெச்சோம்” எனக் கூறினார். இதற்கு, ``நான் மூப்பனாரால் வளர்க்கப்பட்டவன். நினைத்த இடத்திலெல்லாம் எம்.எல்.ஏ-வுக்கு ஆசைப்பட்டு நிக்க மாட்டேன்” என்று கூறினேன். ``சரி, முதல்வர், துணை முதல்வரிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன்” என வேலுமணி கூறினார்.

மூப்பனாருடன் கோவை தங்கம்
மூப்பனாருடன் கோவை தங்கம்

அதன் பிறகு வேலுமணி, ``அண்ணா. நீங்க ஆட்டோ, சைக்கிள் சின்னத்தில் நின்னா ரீச் ஆகாது. இரட்டை இலைச் சின்னத்தில் நில்லுங்க” என்றார். அதற்கு நான், ``நாங்கள் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட முடியும். அது மூப்பனார் வாங்கிக் கொடுத்த அதிர்ஷ்ட சின்னம்” என்று வற்புறுத்தினேன்.

இதன் மூலம், நான் இரட்டை இலைச் சின்னத்தில் நிக்க மாட்டேன் என வேலுமணி முடிவுக்கு வந்துவிட்டார். மேலும், நான் தி.மு.க-வுடன் ஆதரவாக இருப்பேன் என்று வேலுமணி தன் நண்பர்களிடம் கூறியிருக்கிறார். ``அவர் வால்பாறைல நின்னு பலமுறை ஜெயிச்சுருக்கார். சட்டசபைல நல்லா செயல்பட்டிருக்கார். நீங்களே அவர் ஸ்டேட் லீடர்னு சொல்றீங்க.

ஜி.கே.வாசனுடன் கோவை தங்கம்
ஜி.கே.வாசனுடன் கோவை தங்கம்

அப்பறம் அவருக்கு சீட் இல்லாட்டி எப்படி வேலுமணி?” என அவரது கட்சியினரே கேட்டனர். அதற்கு வேலுமணி, ``என்னுடைய மாவட்டத்தில் நான் கூட்டணிக்குக் கொடுக்க மாட்டேன்” என்று திட்டவட்டமாகக் கூறினார்.

உடனே நான், ``சிட்டிங் அ.தி.மு.க எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சனன் இருக்கும்போதே, பா.ஜ.க-வுக்கு தெற்கு தொகுதி கொடுத்திருக்கிறீர்களே?” என்று கேட்டேன். ``அது வேறு விஷயம்” என்று மழுப்பான பதிலையே வேலுமணி கூறினார். இதற்கு முன்பு நான் பல அமைச்சர்களுடன் பழகியிருக்கிறேன். ஆனால், என்னுடைய 55 ஆண்டுக்கால பொதுவாழ்வில் கர்வம், ஆணவம் நிறைந்த முதல் அமைச்சராக வேலுமணியைப் பார்க்கிறேன்.

வேலுமணி
வேலுமணி

இது குறித்து துணை முதல்வரிடம் பேசியபோது, ``மேற்கு மண்டலம் முழுவதும் வேலுமணியின் கன்ட்ரோல். நீங்க திரு.வி.க நகர்ல நில்லுங்க அண்ணா” என்று கூறினார். பலவிஷயங்களைத் தியாகம் செய்துவிட்டு, அவரே கதி என்று இங்கு வந்தேன். என் தலைவர் வாசனும் என்னைக் கைவிட்டுவிட்டார். வால்பாறையில் சுயேச்சையாகப் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு எடுப்பேன்” என்றார்.