Published:Updated:

மனைவி, தங்கையை இழந்த சென்னைப் பேராசிரியர்! - கொரோனாவால் சோகத்தில் மூழ்கிய குடும்பம்

கொரோனா மரணம்
News
கொரோனா மரணம்

சென்னை ராயப்பேட்டையில் குடியிருக்கும் பேராசிரியரின் மனைவியும் தங்கையும் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் உயிரிழந்ததால், அந்தக் குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது. கொரோனா வைரஸின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலம்
கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலம்

இருப்பினும், கொரோனாவால் உயிரிழப்பு சதவிகிதம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேசமயத்தில், தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. கொரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், வைரஸோடு போராடும் களப் பணியாளர்களும் பாதிக்கப்பட்டுவருகின்றனர். மருத்துவர்கள், நர்ஸ்கள், காவல்துறையினர் உயிரிழந்துவருவது வேதனைக்குரியதாகும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உறவினர்கள் வேதனை!

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி அடக்கம், தகனம் செய்யப்பட்டுவருகிறது. கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் மூலமாகவும் வைரஸ் தொற்று பரவக்கூடும் என்பதால், இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்துகொள்ள முடியாத சூழல் நிலவுகிறது. அதனால் கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்கள் அநாதைகளைப் போல அடக்கம் செய்வதைப் பார்க்கும்போது இந்த நிலைமை இனி யாருக்கும் ஏற்படக்கூடாது என்றே பலரும் கருதுகின்றனர்.

கொரோனாவால் உயிரிழந்தவர்
கொரோனாவால் உயிரிழந்தவர்

கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை மாநகராட்சி ஊழியர்களும் சுகாதாரத்துறையினரும் அடக்கம், தகனம் செய்துவருகின்றனர். தினமும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துவருவதால், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தங்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் இந்தச் சேவையில் ஈடுபடுத்திவருகின்றனர். இஸ்லாமிய அமைப்பான எஸ்.டி.பி.ஐ-யில் உள்ள தன்னார்வலர்கள் 18 குழுக்களாகச் செயல்பட்டு கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினரும் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம், தகனம் செய்யும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். தினமும் 4 முதல் 5 சடலங்கள் என இதுவரை 123 சடலங்களை த.மு.மு.க அமைப்பினர் அடக்கம் செய்துள்ளதாக, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் புழல் ஷேக் முகமது அலி நம்மிடம் தெரிவித்தார். அவரிடம் பேசினோம்.

``ஒரு மனிதன் இறந்த பிறகு மரியாதையுடன் அடக்கம், தகனம் செய்யப்பட வேண்டும். ஆனால், உறவுகள் இல்லாதவர்கள் இறக்கும்போது அவர்களின் இறுதிச் சடங்கு கேள்விக்குறியாகிவிடுகிறது. அதனால்தான் அநாதை சடலங்களை அவரவர் குலவழக்கப்படி அடக்கம், தகனம் செய்ய த.மு.மு.க முடிவுசெய்தது.

புழல் ஷேக் முகமது அலி
புழல் ஷேக் முகமது அலி

இந்தச் சமயத்தில்தான், கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதில் உள்ள பிரச்னைகள் குறித்து எங்களின் கவனத்துக்கு தகவல் வந்தது. குறிப்பாக, சென்னையில் கொரோனாவால் இறந்த டாக்டரின் சடலத்தை அடக்கம் செய்ய எதிர்ப்புகள் கிளம்பின. அப்போது, எத்தனையோ உயிர்களைக் காப்பாற்றிய அந்த டாக்டரின் சடலம், நடுரோட்டில் கிடந்ததைப் பார்த்தபோதுதான் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களையும் அடக்கம், தகனம் செய்ய முடிவுசெய்தோம். இதற்காக 27 குழுக்களை ஏற்படுத்தி, அந்தப் பகுதியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு உரிய மரியாதையை செலுத்திவருகிறோம்.

123 சடலங்கள்

சென்னை மண்டலத்தில் 46 சடலங்களையும் விழுப்புரத்தில் 2, வேலூரில் 3, பேரணாம்பட்டு பகுதியில் 1, திருச்சி 1, காயல்பட்டினம் 1, ஆரணி1 என 55 சடலங்களை இதுவரை அடக்கம், தகனம் செய்துள்ளோம். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அநாதையாக இறந்தவர்கள், சென்னை மண்டலத்தில் 62 பேரும், கோவையில் 2 பேரும், உடுமலைப்பேட்டையில் 2 பேரும், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் தலா ஒருவரும் என 68 சடலங்களை அடக்கம், தகனம் செய்துள்ளோம். சடலங்களை அடக்கம் செய்யும்போது அவர்களின் உறவினர்களைப் போல கருதி அனைத்து மரியாதைகளையும் எந்தவித குறையும் இல்லாமல் செய்துவருகிறோம்.

அடக்கம் செய்யும் காட்சி
அடக்கம் செய்யும் காட்சி

சென்னை மண்டலத்தைப் பொறுத்தவரை ராஜீவ்காந்தி, ஓமந்தூரார், கீழ்ப்பாக்கம் ஆகிய அரசு மருத்துவமனைகளிலிருந்து கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல் த.மு.மு.க -விற்கு தெரிவிக்கப்படும். உடனடியாக பாதுகாப்புக் கவச உடைகளை அணிந்துசெல்லும் த.மு.மு.க-வினர் சடலங்களை அடக்கம், தகனம் செய்துவருகின்றனர். இந்தச் சேவை தொடரும்" என்றார்.

சென்னைப் பேராசிரியர் குடும்பம்:

த.மு.மு.க-வினர், சென்னை ராயப்பேட்டையில் கொரோனாவால் உயிரிழந்த ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்களின் சடலங்களை அடக்கம் செய்துள்ளனர். சென்னையில் உள்ள கல்லூரியின் பேராசிரியரின் மனைவிக்கும் பேராசிரியரின் தங்கைக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இருவருக்கும் ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்து. இதில், பேராசிரியரின் மனைவி முதலில் உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து 12 மணிநேரத்துக்குள் பேராசிரியரின் தங்கையும் உயிரிழந்தார்.

அடக்கம் செய்வதற்கு முன்
அடக்கம் செய்வதற்கு முன்

ஒரே நாளில் மனைவி, தங்கை அடுத்தடுத்து இறந்ததால், பேராசிரியரின் குடும்பம் சோகத்தில் மூழ்கியது. இருவரின் சடலங்களையும் அடக்கம் செய்ய த.மு.மு.க-வினரின் உதவியை பேராசிரியரின் குடும்பம் நாடியுள்ளது. உடனடியாக பேராசிரியரின் மனைவி, தங்கை ஆகியோரின் சடலங்களை ராயப்பேட்டையில் த.மு.மு.க-வினர் அடக்கம் செய்தனர்.பேராசிரியரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா மரணங்கள் கொடூரமானது என்பதால், முன்னெச்சரிக்கையுடன் மக்கள் வாழ வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.