Published:Updated:

̀நான் டெல்லி சென்றது உண்மைதான்; ஆனால்..?' - போட்டோஷாப் படம் குறித்து வானதியின் பதில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எடிட் செய்யப்பட்ட படத்தில் வானதி சீனிவாசன் (இடது ஓரம்)
எடிட் செய்யப்பட்ட படத்தில் வானதி சீனிவாசன் (இடது ஓரம்)

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சென்னையில் மழை பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடச் சென்றபோது வெளியான வீடியோ பெரிதும் விமர்சிக்கப்பட்ட நிலையில், நேற்று வானதியின் இந்தப் புகைப்படமும் சமூக வலைதளங்களில் கிண்டலுக்குள்ளானது.

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது பக்கத்தில் ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில், ``பாஜக குடும்ப உறுப்பினர்களுடன் டெல்லி தலைமை அலுவலகத்தில்” என்று ஒரு குழு படத்தையும் வெளியிட்டிருந்தார். அந்தப் படத்தில் பா.ஜ.க மூத்த உறுப்பினர்களுடன் வானதி சீனிவாசனும் இருந்தார்.

ஆனால், அது போட்டோஷாப் செய்யப்பட்ட படம் என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது. மேலும், பா.ஜ.க மூத்த உறுப்பினர்கள் போட்ட அதே குழு படத்திலும் வானதி சீனிவாசன் இல்லை.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சென்னையில் மழை பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடச் சென்றபோது வெளியான வீடியோ பெரிதும் விமர்சிக்கப்பட்ட நிலையில், நேற்று இந்தப் புகைப்படமும் சமூக வலைதளங்களில் கிண்டலுக்குள்ளானது.

``வானதி சீனிவாசன் போட்டோஷாப் செய்து, அந்தப் படத்தை ட்வீட் செய்திருக்கிறார்" என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அதன் உண்மைத்தன்மையை தெரிந்துகொள்ள வானதி சீனிவாசனை தொடர்பு கொண்டோம்.

பதிவு
பதிவு

``நான் அப்போது டெல்லி சென்றிருந்தது உண்மைதான். அன்றைய தினம், எங்கள் தலைமை அலுவலகத்தில் இருந்து நிர்வாகிகள் அனைவரும் ஒன்றாகத்தான், தேநீர் விருந்துக்காக குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்றிருந்தோம். குழு படம் எடுக்கும்போது நான் சற்று தாமதமாகச் சென்றேன். அதற்குள் பலர் பஸ்ஸில் ஏறிவிட்டனர். எல்லோரும் ஒன்றாகத்தான் பஸ்ஸில் ராஷ்டிரபதி பவன் சென்றோம். ஒரு நினைவுக்காக, போட்டோகிராபர் என்னை தனியாக போட்டோ எடுத்து, குழு படத்துடன் இணைத்துக் கொடுத்தார்.” என்றார்.

டெல்லியில் வானதி சீனிவாசன் எடுத்த வேறு சில படங்கள் இங்கே... 👆

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு