Published:Updated:

கல்வான் மோதலில் உயிரிழந்த ராணுவ வீரர் பழனியின் மனைவிக்கு அரசு வேலை! - பணி ஆணை வழங்கிய முதல்வர்

ராணுவவீரர் மனைவிக்கு பணி ஆணை வழங்கிய எடப்பாடி பழனிசாமி
ராணுவவீரர் மனைவிக்கு பணி ஆணை வழங்கிய எடப்பாடி பழனிசாமி ( உ.பாண்டி )

லடாக் எல்லையில், சீன ராணுவத்துடனான மோதலில் உயிரிழந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனியின் மனைவி வானதி தேவிக்கு இளநிலை உதவியாளருக்கான அரசுப் பணி ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

லடாக் எல்லையில், சீன ராணுவத்தினருடன் நடந்த மோதலில் பலியான இந்திய ராணுவ வீரர் பழனியின் மனைவிக்கு இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

ஜெயலலிதாவுக்கு மரியாதை - எடப்பாடி பழனிசாமி
ஜெயலலிதாவுக்கு மரியாதை - எடப்பாடி பழனிசாமி
உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ராமநாதபுரம் வந்திருந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு வந்திருந்த முதல்வருக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் எம்.மணிகண்டன், என்.சதன் பிரபாகர், காவல்துறை துணைத் தலைவர் என்.எம்.மயில் வானன், காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

`15,000 அடி உயரத்தில் டென்ட்; விதிமீறிய சீனா!- கல்வான் பள்ளத்தாக்கு மோதலின் தொடக்கப்புள்ளி?

விழா மேடையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துக்கு மரியாதை செலுத்திய பின், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு), வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மை பொறியியல் துறை, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை, பள்ளிக்கல்வித்துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை ஆகிய துறைகளின் சார்பாக பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மைத்துறை, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல்துறை, நிதித்துறை ஆகிய துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு புதிய திட்டப்பணிகளையும் அவர் தொடங்கிவைத்தார்.

வானதிதேவிக்கு பணி ஆணை வழங்கிய முதல்வர்
வானதிதேவிக்கு பணி ஆணை வழங்கிய முதல்வர்
உ.பாண்டி

தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்ன்ர் லடாக் எல்லைப் பகுதியில், சீன ராணுவத்துடனான மோதலில் உயிரிழந்த ராமநாதபுரத்தை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் பழனியின் மனைவி வானதிதேவிக்கு இளநிலை உதவியாளருக்கான அரசு பணி ஆணயை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். மேலும், மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

திட்டங்கள் - அடிக்கல்
திட்டங்கள் - அடிக்கல்
உ.பாண்டி

பிறகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் அதிகாரிகளுடன் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு செய்தார். இந்நிகழ்வுகளில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, பாஸ்கரன், எம்.எல்.ஏ-க்கள் மணிகண்டன், சதன் பிரபாகர், முன்னாள் எம்.பி அன்வர் ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

அடுத்த கட்டுரைக்கு