Published:Updated:

அவசர உதவிக்கு `காவல் உதவி' செயலி: தொடங்கிவைத்த முதல்வர் ஸ்டாலின்! - சிறப்பம்சங்கள் என்னென்ன?

அவசர உதவிக்கு `காவல் உதவி' செயலி- ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், அவசர காலங்களில் காவல்துறையின் உதவியை உடனடியாகப் பெறும் பொருட்டு, 60-க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்களுடன் `காவல் உதவி’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

அவசர உதவிக்கு `காவல் உதவி' செயலி: தொடங்கிவைத்த முதல்வர் ஸ்டாலின்! - சிறப்பம்சங்கள் என்னென்ன?

பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், அவசர காலங்களில் காவல்துறையின் உதவியை உடனடியாகப் பெறும் பொருட்டு, 60-க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்களுடன் `காவல் உதவி’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
அவசர உதவிக்கு `காவல் உதவி' செயலி- ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

அவசர காலங்களில் போலீஸாரின் உதவியை நாடுவதற்கு `காவல் உதவி’ எனும் புதிய செயலியை, தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிமுகப்படுத்தி, தொடங்கிவைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, காவல்துறை தலைமை இயக்குநர் செ.சைலேந்திர பாபு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ``காவல்துறை என்பது குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டுமல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும். அதன் தொடர்ச்சியாக, பொதுமக்கள் குறிப்பாகப் பெண்கள், அவசர காலங்களில் காவல்துறையின் உதவியை உடனடியாகப் பெறும் பொருட்டு, 60-க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்களுடன் `காவல் உதவி’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது" எனக் கூறியிருந்தார்.

அவசர உதவிக்கு காவல்துறை அணுக `காவல் உதவி' செயலி
அவசர உதவிக்கு காவல்துறை அணுக `காவல் உதவி' செயலி

`காவல் உதவி’ செயலியின் சிறப்பம்சங்கள் :

1. `அவசரம்’ உதவி பொத்தான் – பொது மக்கள் குறிப்பாக பெண்கள் அவசர காலங்களில் சிவப்பு நிற `அவசரம்’ என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக, பயனாளர் விவரம், தற்போதைய இருப்பிட விவரம் மற்றும் வீடியோ, கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு காவல்துறையின் அவசர சேவை வழங்கப்படும்.

2. அவசரகால அலைபேசி அழைப்பு வசதி (Dial-112/100/101) – பயனாளர்கள் அலைபேசியில் நேரடிப் புகார்களை தெரிவிக்க `Dial-100’ என்ற செயலி `காவல் உதவி’ செயலி மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பதிவுசெய்யப்பட்ட அலைபேசி எண்ணிலிருந்து அழைப்பதால், பயனாளர் விவரம் மற்றும் தற்போதைய இருப்பிட விவரம் அறியப்பட்டு துரித சேவை வழங்கப்படும்.

3. அலைபேசி வழிப் புகார் அளித்தல் – பயனாளர்கள், குறிப்பாக மகளிர், சிறார்கள், முதியோர்கள் ஆகியோர் அவசரகாலப் புகார்களை, படங்கள் மற்றும் குறுகிய அளவிலான வீடியோவை பதிவேற்றம் செய்து, புகாரைப் பதிவுசெய்யலாம்.

4. இருப்பிட விவர பரிமாற்ற சேவை வசதி (Location sharing) – பயணங்கள் மேற்கொள்ளும்போது, அவசரகாலத்தில் பயனாளர்கள், Whatsapp / Google Map வாயிலாக, நேரடி இருப்பிட விவரங்களை நண்பர் அல்லது உறவினருடன் பரிமாறும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனாளர்களின் உறவினர் அல்லது நண்பர் வாயிலாக செல்லும் இருப்பிடம் அறியப்பட்டு, காவலர் விரைந்து செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

5. காவல் நிலைய இருப்பிடம் மற்றும் நேரடி அழைப்பு வசதி, காவல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி விவரம் அறிதல், இணைய வழி பொருளாதாரக் குற்றம் தொடர்பான புகார்கள், இதர அவசர / புகார் உதவி எண் அழைக்கும் வசதி, அவசரகால அறிவிப்புகள் / இதர தகவல்கள் அறியும் வசதி உட்பட காவல்துறையின் குடிமக்கள் சேவை செயலி 112 இந்தியா ஆகிய வசதிகளையும் இச்செயலி மூலம் பொதுமக்கள் பெற்று பயன்பெறலாம்.

இச்செயலியை Google Play Store-ல் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism