Published:Updated:

"முதல்வர் நேரில் வந்து ஆறுதல் கூறுவார் என்று எதிர்பார்க்கவில்லை!" - பிரியா குடும்பத்தினர் உருக்கம்

பிரியாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் முதல்வர்

``பிரியாவின் மரணத்துக்குப் பிறகு, தவறிழைத்த மருத்துவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுத்திருப்பதாக முதல்வர் தெரிவித்தார்.'' - பிரியா குடும்பத்தினர்

சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பிரியா. சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படித்துவந்தார். கால்பந்து போட்டிகளில் அதிகம் ஆர்வம்கொண்ட பிரியா மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு மூட்டுவலி காரணமாக சிகிச்சை எடுத்துக்கொண்ட பிரியா, மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, மருத்துவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பு தெரிவித்திருந்தது.

கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு அஞ்சலி செலுத்தும் முதல்வர்
கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு அஞ்சலி செலுத்தும் முதல்வர்

இந்த நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரியாவின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இது தொடர்பாக பிரியாவின் குடும்பத்தினர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது, ``பிரியாவின் மரணத்துக்காக முதல்வர் நேரில் வந்து ஆறுதல் கூறுவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. பிரியா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோதே, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் நேரில் வந்து எங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துகொடுத்தார்கள். பிரியாவின் மரணத்துக்குப் பிறகு, தவறிழைத்த மருத்துவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுத்திருப்பதாக முதல்வர் தெரிவித்தார்.

பிரியா குடும்பத்தினருக்கு நிவாரணங்களை வழங்கும் முதல்வர்
பிரியா குடும்பத்தினருக்கு நிவாரணங்களை வழங்கும் முதல்வர்

மேலும், அரசு வேலையும், நிவாரணத் தொகையும் வழங்கியிருக்கிறார். நாங்கள் எதிர்பார்க்காத வகையில் எங்களுக்கு வீடும் வழங்கியிருக்கிறார். அரசின் இந்த உதவிகளுக்கு நன்றி" எனத் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ``கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம். ஏற்றமிகு உயரத்தை எட்டவிருந்த திறமைசாலியான அவரின் இழப்பு, அவர் குடும்பத்துக்கும் - நம் மாநில விளையாட்டுத்துறைக்கும் ஏற்பட்ட மாபெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியாக நிற்கும், பிரியாவின் உயிர்க்கு ஈடாகாது" எனப் பதிவிட்டிருக்கிறார்.