Published:Updated:

`தியேட்டர்கள், பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி!' - தமிழக அரசு உத்தரவின் முக்கிய அம்சங்கள்

தியேட்டர்
தியேட்டர் ( Representational Image )

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவை நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவருகிறது. இதனால், பொருளாதாரரீதியாகக் கடும் பாதிப்புகள் ஏற்படவே, கடந்த ஜூலை முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளோடு ஊரடங்கு உத்தரவு நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

அரசுப் பள்ளி மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள்
Representational Image

தமிழக அரசு உத்தரவின் முக்கிய அம்சங்கள்!

* பள்ளிகள் (9,10, 11 மற்றும் 12-ம் வகுப்புகள் மட்டும்), அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் 16-11-2020 முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதியளிக்கப்படுகிறது.

* பள்ளி\கல்லூரிகள் மற்றும் பணியாளர் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் 16-11-2020 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

கொரோனா தடுப்பு  மருந்து: `ஜனவரி முதல் ஜூன் வரை; முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை’ - மத்திய அரசு

* தற்காலிக இடத்தில் தற்போது செயல்படும் பழக்கடை மொத்த வியாபாரம் 2.11.2020 முதலும், பழம் மற்றும் காய்கறி சில்லறை வியாபாரக் கடைகள் மூன்று கட்டங்களாக 16-11-2020 முதலும் கோயம்பேடு அங்காடி வளாகத்தில் அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

* பொதுமக்களுக்கான புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து சேவை மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

கோயம்பேடு மார்க்கெட்
கோயம்பேடு மார்க்கெட்

* சின்னத்திரை படப்பிடிப்புகளில் உரிய வழிகாட்டு நெறிமுகளைப் பின்பற்றி ஒரே சமயத்தில் 150 பேருக்கு மேல் அனுமதியில்லை. பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

* தமிழகம் முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர மற்ற இடங்களிலுள்ள மல்டிப்ளெக்ஸ் திரையங்குகள், திரையரங்குகள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 50 சதவிகித இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி 10-11-2020 முதல் இயங்க அனுமதி.

* மதம்சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாசார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் இவை தொடர்பான கூட்டங்கள் 16-11-2020 முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 100 நபர்கள் பங்கேற்கும் வகையில், நடத்த அனுமதியளிக்கப்படுகிறது.

* பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 10-11-2020 முதல் செயல்பட அனுமதியளிக்கப்படுகிறது.

* நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, திருமண நிகழ்வுகளுக்கு 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களில் 100 நபர்களுக்கு மிகாமலும் கலந்துகொள்ள அனுமதி.

* நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 1.11.2020 முதல் உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்க அனுமதி. 60 வயது மற்றும் அதற்குக் குறைவானர்களுக்கு மட்டுமே அனுமதி.

ஊட்டி
ஊட்டி
கே.அருண்

நீடிக்கும் தடை

* நீச்சல்குளங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள்.

* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை நீடிக்கும்.

* வெளிமாநிலங்களிலிருந்து (புதுச்சேரி தவிர) தமிழ்நாட்டுக்குள் வருபவர்களுக்கும், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்குச் செல்பவர்களுக்கும் தற்போது நடைமுறையிலுள்ள இ-பதிவு முறை தொடர்ந்து அமல்படுத்தப்படும்’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதேபோல், `நோய்த் தொற்றுக் குறைந்திருக்கும் நிலையில், பொதுமக்கள் பண்டிகை காலங்களில் அதிமாகக் கூடுவதைத் தவிர்த்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்’ எனவும் அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு