Published:Updated:

`இனி தீயணைப்பு மீட்புப் பணிகளில் பெண்கள்!' - தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை அதிரடி

தீயணைப்பு வீரர்

சர்வதேச தரத்துக்கு தமிழக தீயணைப்புத் துறையை உயர்த்தும் நோக்கில், வீரர்களுக்கு சிறப்பு பயிற்சிகளை அளித்து எந்த சூழ்நிலையையும் அவர்கள் எதிர்கொள்ளும் வகையில் தயார்படுத்த முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.

`இனி தீயணைப்பு மீட்புப் பணிகளில் பெண்கள்!' - தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை அதிரடி

சர்வதேச தரத்துக்கு தமிழக தீயணைப்புத் துறையை உயர்த்தும் நோக்கில், வீரர்களுக்கு சிறப்பு பயிற்சிகளை அளித்து எந்த சூழ்நிலையையும் அவர்கள் எதிர்கொள்ளும் வகையில் தயார்படுத்த முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.

Published:Updated:
தீயணைப்பு வீரர்

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையில் முதன்மை அலுவலர்களாக சில பெண் காவலர்கள் பணியாற்றி வரும் நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் கள வீரர்களாகப் பெண்களும் பணியாற்ற வழிவகுக்கும் முன்மொழிவு ஒன்றை டி.ஜி.பி-யும், தீயணைப்புத் துறையின் தலைமை இயக்குநருமான பிரஜ் கிஷோர் ரவி தமிழக அரசுக்குப் பரிந்துரைத்துள்ளார்.

தீயணைப்பு வாகனம்
தீயணைப்பு வாகனம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையை சர்வதேச தரத்துக்கு இணையாக நவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ள டி.ஜி.பி பிரஜ் கிஷோர் ரவி, `தீயணைப்புத் துறையில் 22 பெண் அலுவலர்கள் உள்ள நிலையில், தீயணைப்புத் துறையின் படை வீரர்களாக இதுவரையில் பெண் காவலர்கள் சேர்க்கப்படவில்லை, விரைவில் பெண்களும் சேர்க்கப்படுவார்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும் அவர், சர்வதேச தரத்துக்கு தமிழக தீயணைப்புத் துறையை உயர்த்தும் நோக்கில், வீரர்களுக்கு சிறப்பு பயிற்சிகளை அளித்து எந்த சூழ்நிலையையும் அவர்கள் எதிர்கொள்ளும் வகையில் தயார்படுத்த முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் மற்றும் பேரிடர் மேலாண்மைப் பணிகளில் ஈடுபட்டுள்ள தீயணைப்புப் படை வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக சென்னையை அடுத்த தாம்பரத்தில் புதிய பயிற்சி மையம் தொடங்கப்பட உள்ளதாகவும், பேரிடர் ஏற்படும் சூழலில், பொது மக்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பு, மீட்பு மற்றும் நிவாரணம் ஆகியவற்றில் காவல்துறை உட்பட பிற துறைகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கும் பயிற்சி மையத்தின் மூலம் பயிற்சி வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தீயணைப்பு வாகனம்
தீயணைப்பு வாகனம்

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் நாய்களைப் பயன்படுத்துவதற்காக நாய்கள் படை உருவாக்கப்படும் எனவும், இதற்காக நான்கு நாய்க்குட்டிகளை வாங்கி உள்ளதாகவும், அவற்றுக்கு மத்தியப் பிரதேசத்தில் உள்ள நாய்கள் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படும் எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் டி.ஜி.பி பிரஜ் கிஷோர் ரவி. மேலும், தன்னார்வலர்கள் திட்டத்தின் கீழ் சுமார் பத்தாயிரம் பேருக்கு பேரிடர் பாதுகாப்புப் பயிற்சி அளிக்க உள்ளதாகவும், பயிற்சிக்குப் பிறகு, அவர்கள் பேரிடர் மீட்புக் குழுவின் ஓர் அங்கமாகச் செயல்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.