Published:Updated:

`ஜூன் 19 முதல் 30 வரை; 4 மாவட்டங்களில் 12 நாள்கள் முழுஊரடங்கு!’ - அரசு அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்

ஊரடங்கு
ஊரடங்கு

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19-ம் தேதி முதல் ஜூன் 30 வரையில் 12 நாள்கள் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னையில் தொடர்ச்சியாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதுதொடர்பாக மருத்துவக் குழுவினர் இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்குப் பின்னர் மருத்துவ நிபுணர் குழு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, ``தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் உச்சக்கட்டத்தை அடைந்த பின்புதான் குறையும் எனக் கூறியிருந்தோம். அதுபோல பாதிப்பு படிப்படியாகக் குறையத் தொடங்கும். எனினும், மூன்று மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது அலை உருவாக வாய்ப்புள்ளது” என்று கூறியது. சென்னையில் லாக் டௌன் தொடர்பான நடவடிக்கைகளைக் கடுமையாக்குவது குறித்தும் முதல்வருக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

மருத்துவ நிபுணர்கள் குழு
மருத்துவ நிபுணர்கள் குழு
கே.ஜெரோம்

இதையடுத்து, அமைச்சரவைக் கூட்டத்திலும் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரையில் 12 நாள்கள் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழக அரசு அறிவித்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்;

  • மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள் தொடர்ந்து நடக்கும்.

  • அவசரத் தேவைகள் தவிர்த்து வாடகை ஆட்டோ, டாக்ஸி, மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

  • மாநில அரசு துறைகள் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்படும்.

  • மத்திய அரசு அலுவலகங்கள் 33 சதவிதித பணியாளர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படுவார்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
  • கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வரவேடிய அவசியம் இல்லை.

  • வங்கிகள் 33 சதவிகித பணியாளர்களோடு 29, 30 ஆகிய நாள்களில் மட்டும் செயல்பட அனுமதி உண்டு. தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் அது தொடர்பான வங்கிப்பணி, மற்றும் போக்குவரத்து வழக்கம்போல் செயல்படும்.

  • பொது விநியோகக் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். எனினும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் வரும்பொது விநியோகக் கடைகள் இயங்காது.

  • காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரைதான் செயல்பட வேண்டும். அத்தியாவசிய பொருள்கள் வாங்கும் மக்கள் வாகனங்களைப் பயன்படுத்தாமல் 2 கி.மீ தொலைவுக்குள் சென்று பொருள்கள் வாங்கி வர வேண்டும்.

  • உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மனி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் இயங்க அனுமதி கிடையாது.

  • அம்மா உணவங்கள் மற்றும் ஆதரவற்றோருக்குக்காக அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் செயல்படும்.

  • தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதி பெற்று இயங்கலாம்.

சென்னை
சென்னை
  • சரக்கு போக்குவரத்துக்குத் தடை இல்லை.

  • சென்னையில் இருந்து திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய காரணங்களுக்காக மட்டும் பிற மாவட்டங்களுக்குச் செல்ல உரிய ஆவணங்களைக் காட்டிய பிறகே இ-பாஸ் வழங்கப்படு.

  • வெளிமாநில மற்றும் வெளி நாட்டில் இருந்து வருபவர்களுக்கு தற்போது நடைமுறையில் இருக்கும் முறையே தொடரும்.

  • 21.6.2020 மற்றும் 28.6.2020 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கண்ட எந்த தளர்வுகளும் இன்றி முமையான ஊரடங்கு அமலில் இருக்கும்.

  • கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது.

அடுத்த கட்டுரைக்கு