Published:Updated:

நோட்டமிடும் 33 குழுக்கள்; சிக்கினால் 7 ஆண்டுகள் சிறைதான்!- எஸ்.பி-யின் வெங்காயம் பதுக்கல் எச்சரிக்கை

வெங்காயம் பதுக்கலைத் தடுக்க 33 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் 40 இடங்களில் சோதனை நடந்துவருவதாகவும் குடிமைப் பொருள் சிஐடி பிரிவு எஸ்.பி.சாந்தி எச்சரித்துள்ளார்.

வெங்காயம் பதுக்கல் குறித்து எஸ்.பி சாந்தி பேட்டி
வெங்காயம் பதுக்கல் குறித்து எஸ்.பி சாந்தி பேட்டி

வெங்காயத்தின் விலையைக் கேட்டாலே இல்லத்தரசிகளுக்கு தலைசுற்றுகிறது. 1 கிலோ வெங்காயம் 200 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வரலாற்று சாதனை படைத்துவருகிறது. விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துவருகிறது. எகிப்திலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அதன் விலை ஓரளவு குறைந்துள்ளது.

வெங்காய சோதனை
வெங்காய சோதனை

இந்தநிலையில் வெங்காய விலை உயர்வை விமர்சிக்கும் வகையில் டிக்டாக் வீடியோக்கள் மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வைலாகிவருகிறது. அதைவிட பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் வெங்காயம் மூட்டைகள் திருடப்பட்டன. சென்னை சேலையூர் பகுதியிலும் வெங்காய மூட்டை திருட்டு நடந்துள்ளது. இது தவிர, சென்னை தி.நகரில் உள்ள பிரபலமான வணிக நிறுவனத்தில் வெங்காயம் விற்பனையில் மோசடி நடந்துள்ளதாகப் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

`உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை!' - தேர்தல் ஆணையம் கண்டிப்பு #NowAtVikatan

வெங்காயத்தின் அவசிய தேவையைக் கருதி தமிழக அரசும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் குறைந்தவிலைக்கு விற்பனை செய்துவருகிறது. வெங்காயம் விலையேற்றத்துக்கு பதுக்கலே காரணம் என்று குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கருதியது. இதையடுத்து அந்தத் துறையின் எஸ்.பி சாந்தி தலைமையிலான போலீஸார் கோயம்பேடு பகுதியில் சோதனை நடத்தினர். இதற்காக 33 குழுக்கள் அமைக்கப்பட்டு 40 இடங்களில் சோதனை நடந்துவருவதாக எஸ்.பி சாந்தி தெரிவித்தார்.

பதுக்குவோருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும். சென்னையைப் பொறுத்தவரை வெங்காயம் பதுக்குவோர் மீது பொதுமக்கள் 9840979669 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.
சாந்தி

இதுகுறித்து சாந்தி செய்தியாளர்களிடம், ``வெங்காய விலை அதிகரித்துள்ளதால் பதுக்கலைத் தடுக்க சோதனை நடத்திவருகிறோம். மொத்த வியாபாரிகள் 50 டன் இருப்பு வைத்துக்கொள்ளலாம். சில்லறை வியாபாரிகள் 2 டன் மட்டுமே வைத்திருக்க வேண்டும். இருப்பு குறித்து ரசீது வைத்திருக்க வேண்டும்.

மேலும், பதுக்கலில் ஈடுபடுவோர்கள் மீது அத்தியாவசிய பண்டக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். பதுக்குவோருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும். சென்னையைப் பொறுத்தவரை பதுக்குவோர் மீது பொதுமக்கள் 9840979669 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். சென்னையில் இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை" என்றார்.

வெங்காய சோதனை
வெங்காய சோதனை

வெங்காயம் பதுக்கலைத் தடுக்க அமைக்கப்பட்டுள்ள குழுவினர் மாநிலம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டாலும் இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. போலீஸாரின் இந்த அதிரடி நடவடிக்கை பதுக்கலில் ஈடுபடுவோர்களுக்கு பீதியை ஏற்படுத்தும் என்று போலீஸார் எதிர்பார்க்கின்றனர்.