Published:Updated:

கரூர்: `குற்றவியல் குறிப்பாணைகளை ரத்து பண்ணணும்!’ - அரசு ஊழியர்கள் கோரிக்கை

அரசு ஊழியர் சங்க மாநாடு
அரசு ஊழியர் சங்க மாநாடு

`உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை ஆகியவற்றில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு, ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்கப்படும்' என அறிவித்து அரசாணையை முதலமைச்சர் வெளியிட்டிருந்தார்.’

``ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதற்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 5,068 பேருக்கு வழங்கப்பட்ட, 17 பி குற்றவியல் குறிப்பாணைகளை அரசு உடனே ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் அரசுத்துறையிலுள்ள 4.5 லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்’’ என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் இரா.மங்களபாண்டியன் தெரிவித்தார்.

அரசு ஊழியர் சங்க மாநாடு
அரசு ஊழியர் சங்க மாநாடு

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மண்டல அளவிலான ஆயத்த மாநாடு, கரூர் நாரதகான கூட்ட அரங்கில் நடைபெற்றது.

`அரசுப் பள்ளி மைதானத்தில் இருந்த 10 மரங்களை வெட்டியது யார்?’ -கொதிக்கும் ராசிபுரம் மக்கள்

இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்டத் தலைவர் மு.சுப்பிரமணியன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் ஜே.எஸ்.விஜயகுமார், மதுரை மாவட்டத் தலைவர் ஜே.மூர்த்தி, தேனி மாவட்டத் தலைவர் கு.வரதராஜ், திருச்சி மாவட்டத் தலைவர் ம.ப.விவேகானந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

மங்களபாண்டியன்
மங்களபாண்டியன்

மண்டல மாநாடு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் இரா.மங்களபாண்டியன் மற்றும் மாநில துணைத் தலைவர் ஆ.பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர். இந்த மாநாட்டில், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மாநாட்டு நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் இரா.மங்களபாண்டியன், ``ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதற்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 5,068 பேருக்கு வழங்கப்பட்ட 17 பி குற்றவியல் குறிப்பாணைகளை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் அரசுத் துறைகளிலுள்ள 4.5 லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சிறப்பு ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, ஊர்ப்புற நூலகர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட 3.5 லட்சம் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

அரசு ஊழியர் சங்க மாநாடு
அரசு ஊழியர் சங்க மாநாடு

சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை வரைமுறை செய்ய வேண்டும் என்வை உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 27-ம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் மாநில அளவிலான ஆயத்த மாநாட்டில் ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இதில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

அதற்குள், தமிழக அரசு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசித் தீர்வுகாண வேண்டும். தவறினால், அரசியல் திருப்புமுனை மாநாடாக அமையும். 'குறவன் ஊற்றினால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு 20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்' என தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால், இதுவரை ஒரு அரசு ஊழியருக்குக்கூட இந்தத் தொகை வழங்கப்படவில்லை. மேலும், 'உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை ஆகியவற்றில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு, ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்கப்படும்' என அறிவித்து அரசாணையை தமிழக முதலமைச்சர் வெளியிட்டிருந்தார்.

மங்களபாண்டியன்
மங்களபாண்டியன்

அவருடைய அரசாணையை அவரே மீறியிருக்கிறார். அவர் அறிவித்த அரசாணைப்படி நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், மாநாட்டுக் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வரும் பிப்ரவரி 2-ம் தேதி, அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஊழியர் சங்கங்கள் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு