Published:Updated:

`பொது இடங்களுக்குச் செல்ல தடுப்பூசி கட்டாயமில்லை; ஆனால்..!' - தமிழக அரசின் அறிவிப்புகள் என்னென்ன?

A man carries his granddaughter ( Mahesh Kumar A )

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான முதல் டோஸ் கவரேஜ் 92.31 சதவிகிதமாகவும், இரண்டாவது டோஸ் கவரேஜ் 76.85 சதவிகிதமாகவும் உள்ளதால் தடுப்பூசி கட்டாயம் என்ற அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

`பொது இடங்களுக்குச் செல்ல தடுப்பூசி கட்டாயமில்லை; ஆனால்..!' - தமிழக அரசின் அறிவிப்புகள் என்னென்ன?

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான முதல் டோஸ் கவரேஜ் 92.31 சதவிகிதமாகவும், இரண்டாவது டோஸ் கவரேஜ் 76.85 சதவிகிதமாகவும் உள்ளதால் தடுப்பூசி கட்டாயம் என்ற அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
A man carries his granddaughter ( Mahesh Kumar A )

கோவிட் தொற்று எண்ணிக்கையில் தொடர் சரிவு ஏற்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தளர்த்தி வருகிறது. இந்நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என்ற கட்டுப்பாட்டையும் நீக்கியுள்ளது தமிழக அரசு.

Indians wearing face masks
Indians wearing face masks
AP Photo/Channi Anand

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நவம்பர் 2021-ம் ஆண்டில், தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939, கீழ், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என்பது உடனடியாக அமலுக்கு வரும் சட்ட அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பொது இடங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் செல்பவர்கள் தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில் ஏப்ரல் 2-ம் தேதி நிலவரப்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் 2.31 சதவிகிதமாகவும், இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் 76.85 சதவிகிதமாகவும் உள்ளதால் தடுப்பூசி கட்டாயம் என்ற அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி
ரா.ராம்குமார்

கட்டாய தடுப்பூசி என்ற அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டாலும், பிற கோவிட்-19 நெறிமுறைகளான முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கூட்டத்தைத் தவிர்த்தல் போன்றவற்றைத் தொடர்ந்து கடைப்பிடிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்ள ஊக்கப்படுத்தப்படுவதாகவும் பொது சுகாதார மற்றும் தடுப்பு மருந்து இயக்ககம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் போன்ற மாநில அரசுகளும், டெல்லி அரசும் கட்டாய முகக் கவச கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism