Published:Updated:

எடப்பாடிக்கு வந்தா, தக்காளி சட்னி; ஸ்டாலினுக்கு வந்தா ரத்தமா?

எதிர்கட்சித் தலைவராக  ஸ்டாலின் நடத்திய கிராம சபை
எதிர்கட்சித் தலைவராக ஸ்டாலின் நடத்திய கிராம சபை

வரும் ஆகஸ்ட் 15 அன்று கிராமசபை கூட்டங்களை நடத்தக்கூடாது என்று ஊரக மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை இயக்குநர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். ஆனால் எதிர்கட்சித் தலைவராக இருக்கும்போது கிராமசபை வேண்டும் என்று போராடினார் ஸ்டாலின்.

கொரோனா பிரச்னை உருவான நாளிலிருந்தே கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இடையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, சட்டமன்ற தேர்தல் திருவிழா மற்றும் பல்வேறு மதவிழாக்கள் நடைபெற்றபோதிலும் கிராம சபையை மட்டும் கூட்ட அனுமதிக்கவே இல்லை, முன்பு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி.

எதிர்கட்சித் தலைவராக இருக்கும்போது ஸ்டாலின் நடத்திய கிராம சபை
எதிர்கட்சித் தலைவராக இருக்கும்போது ஸ்டாலின் நடத்திய கிராம சபை
கிராம சபை நடத்தக்கோரி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்புவது எப்படி? - ஒரு வழிகாட்டல்

இதற்கு எதிராக பொங்கித் தீர்த்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ``கிராமசபை கூட்டங்களை நடத்தாமலிருப்பது ஜனநாயக விரோதம். இதை தி.மு.க பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது" என்று கொந்தளித்தார். கூடவே, ஊர் ஊராக தன் கட்சியினர் மூலமாக கிராம சபை கூட்டங்களை நடத்த உத்தரவிட்டார். தானும்கூட காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம சபை கூட்டத்தை ஏற்பாடு செய்து அதில் பங்கேற்றார்.
`கிராமங்கள்தான் ஜனநாயகத்தின் ஆணிவேர்... சல்லிவேர்... வெட்டிவேர்' என்கிற ரேஞ்சுக்கு இந்தக் கூட்டங்களில் பொங்கித் தீர்த்தார் மு.க.ஸ்டாலின்.

இதோ, முதல்வராகவே ஆகிவிட்டார். மு.க.ஸ்டாலின். ஆகஸ்ட் 15 அன்று கிராமசபை கூட்டத்தை நடத்தவேண்டும் என்கிற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. தன்னாட்சி இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து இதைப் பற்றி பேசிவருகின்றன.

இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 15 அன்று கிராமசபை கூட்டங்களை நடத்தக்கூடாது என்று ஊரக மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை இயக்குநர் பிரவின் பி.நாயர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

எதிர்கட்சித் தலைவராக இருக்கும்போது ஸ்டாலின் நடத்திய கிராம சபை
எதிர்கட்சித் தலைவராக இருக்கும்போது ஸ்டாலின் நடத்திய கிராம சபை
கோவை : மக்கள் கிராம சபை கூட்டத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின்! #PhotoAlbum

கொரோனா பெருந்தொற்று காரணமாக, கிராமசபை கூட்டத்தை நடத்தக்கூடாது. யாரும் இந்தக் கூட்டத்தை நடத்தாமல் இருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்யவேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஆக, எடப்பாடிக்கு வந்தா தக்காளி சட்னி. ஸ்டாலினுக்கு வந்தா ரத்தம்.
கிராம சபைக்கு ஸ்டாலின் ஆட்சியிலும் சமாதி!

- விவேக்

அடுத்த கட்டுரைக்கு